அடடே, இதுதான் கொக்கலிக்கட்டை ஆட்டமா! - பிரமிக்கவைக்கும் வேலூர் ஸ்பெஷல் நடனம் #MyVikatan |  Highlights of vellore 

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (07/05/2019)

கடைசி தொடர்பு:12:18 (10/05/2019)

அடடே, இதுதான் கொக்கலிக்கட்டை ஆட்டமா! - பிரமிக்கவைக்கும் வேலூர் ஸ்பெஷல் நடனம் #MyVikatan

அழிந்துவரும் நிலையில் உள்ள தமிழர்களின் பாரம்பர்யக் கலைகளில் ஒன்றான கொக்கலிக்கட்டை ஆட்டத்தை வேலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் ஆரவாரமாகக் காணமுடியும்.

கொக்கலிக்கட்டை ஆட்டம்

அம்மன் கோயில் திருவிழாக்களில், காப்பு கட்டிய நாள் முதல் விரதமிருந்து இரவு நேரங்களில் இந்த ஆட்டத்தைப் பயிற்சி எடுக்கிறார்கள். சாதாரணமாக, வெறும் கால்களில் நடப்பது சுலபம். ஆனால், 2 அடி முதல் 10 அடி உயர கட்டையை காலில் கட்டிக்கொண்டு நடப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இதற்காக, கொக்குக் கால்களைப் போன்று தனித்துவமான கட்டை செதுக்கப்படும். அதன் மேல்பகுதியில் பாதம்வைத்து நின்றால், துணிப்பட்டையை வைத்துக் கட்டுவார்கள். மேள தாளத்துக்கு ஏற்ப தானாகவே கொக்கலிக்கட்டை ஆட்டம் களைகட்டும். 

 Highlights of vellore 

மணிக்கூண்டுக்கு நேரம் சரியில்லை.

வேலூர் மார்க்கெட் என்றாலே மணிக்கூண்டுதான் ஃபேமஸ். போர் நினைவுச்சின்னமாக ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்த ‘கிங் ஜார்ஜ்’ என்ற அரசனால் இந்த மணிக்கூண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், நேரத்தைக் காட்டுவதற்காக ஒரு பெரிய கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, மணிக்கூண்டுக்கு நேரம் சரியில்லை. கட்டடம் விரிசலடைந்து காணப்படுகிறது. கடிகாரமும் கடந்த சில ஆண்டுகளாக இயங்கவில்லை.