`நெகட்டீவ் ரோல் பண்றவங்களை மக்களுக்குப் புடிக்காதுனு நினைச்சேன்!' - `மெளனராகம்' பேபி ஷெரின் | child artist sherin talks about her sucess

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (07/05/2019)

கடைசி தொடர்பு:17:00 (07/05/2019)

`நெகட்டீவ் ரோல் பண்றவங்களை மக்களுக்குப் புடிக்காதுனு நினைச்சேன்!' - `மெளனராகம்' பேபி ஷெரின்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `மெளனராகம்' சீரியலில் நெகட்டீவ் ரோலில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் பேபி ஷெரின். இவர் சமீபத்தில் நடந்த விஜய் அவார்ட்ஸில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதைப் பெற்றுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் ஷெரினின் பரதநாட்டிய வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்பட்டு வருகிறது. படிப்பு, நடனம், நடிப்பு என ஆல்ரவுண்டராக இருக்கும் பேபி ஷெரினிடம் பேசினோம்.

ஷெரின்

``அவார்ட் வாங்கினது ரொம்ப ஹேப்பியா இருக்கு. சீரியலில் இதுவரை எந்தக் குழந்தை நட்சத்திரமும் நெகட்டீவ் ரோல் பண்ணது இல்ல. அதை சவாலாக எடுத்து நான் பண்ணதுனால, இந்த அவார்ட் கிடைச்சுருக்கு. சீரியல் ஆரம்பிச்ச புதிதில் நெகட்டீவ் ரோல் பண்ணா நம்மை யாருக்கும் பிடிக்காதுனு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால், அது உண்மையில்லனு லேட்டாதான் புரிஞ்சுது. சீரியலில் நான் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களுக்கு சோஷியல் மீடியாவில் நிறைய பாராட்டுகள் கிடைச்சுருக்கு. சீரியல் தாண்டி மூன்று வருஷமாகப் பரதம் கத்துக்கிட்டு இருக்கேன். சலங்கைப் பூஜை முடிச்சு, நிறைய ஸ்டேஜ் ஈவென்ட்டுகளில் இப்போ பிஸி. அடுத்து அரங்கேற்றம் தான்.

சீரியல்

சீரியலில் நடிச்சுட்டு இருக்கிறதால பாதி நாள் ஸ்கூல் போக முடியல. அதனால் பாடங்களை அம்மா சொல்லித்தர்றாங்க. படிப்பு, நடனம், சீரியல் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பிளான் போட்டு வேலை செய்றதுனால எல்லாத்துலையும் சக்சஸ் தான்" என்று சொல்லும் ஷெரின் சீரியல் என்ட்ரிக்கு முன்பே தமிழ் சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.