சிறிய விலங்குகள்கூட இந்தக் காட்டில் வாழாது! - ஊட்டி பைன் மரக்காடு சீக்ரெட்  #MyVikatan | Secret behind Pine Tree Forests in Ooty

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (07/05/2019)

கடைசி தொடர்பு:14:00 (14/05/2019)

சிறிய விலங்குகள்கூட இந்தக் காட்டில் வாழாது! - ஊட்டி பைன் மரக்காடு சீக்ரெட்  #MyVikatan

குளுகுளு ஊட்டியில் எங்கு பார்த்தாலும் மலைத்தொடர்கள், பள்ளத்தாக்குகள், நீர் நிலைகள், சோலைக் காடுகள், புல்வெளிகள், சுற்றுலாத் தலங்கள் என எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென இருப்பதால் காண்போரை கவர்ந்திழுக்கும். அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட  பைன் மரங்கள் அடர் பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளும், உயரமாகவும், நேராகவும் வளரும் தன்மை கொண்டது.

பைன் காடுகள்

பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காணப்படுவதால் பல ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டது. ஊட்டி கூடலூர் சாலையில் பைன் பாரஸ்ட் என்ற பெயரில் சுற்றுலாத் தலமே உள்ளது. ஏராளமான திரைப்படங்களிலும் பாடல் காட்சிகளிலும் இடம்பெற்றுவருகிறது.

பைன் காடுகள்

இவ்வளவு அழகான இந்த பைன் மரங்கள் ஊசி போன்ற இலைகளைத் தொடர்ந்து உதிர்ப்பதால் மரத்துக்கு அடியில் இலைகள் அடுக்குகளாகச் சேர்ந்து தரையில் புல் பூண்டுகள்கூட வளரவிடாமல் செய்கிறது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பைன் மரக்காடுகள் பறந்து விரிந்து கிடந்தாலும் எந்தப் பயனும் இல்லை. ஒரு முயல்கூட இந்தக் காட்டில் வாழமுடியாத நிலை ஏற்படுகிறது. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சி வன விலங்குகளின் வாழ்விடத்தை நிர்மூலமாக்கும் பைன் மரக்காடுகள் பசுமைப் பாலைவனமாகவே உள்ளது.