ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியீடு! - முதல் இடம் பிடித்தது ஈரோடு | Tamil Nadu Plus One result released

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (08/05/2019)

கடைசி தொடர்பு:11:21 (08/05/2019)

ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியீடு! - முதல் இடம் பிடித்தது ஈரோடு

2018-19-ம் கல்வி ஆண்டுக்கான ப்ளஸ் ஒன் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது, அரசு தேர்வுகள் இயக்ககம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. பொதுவாக மே மாதம் மத்தியில் வெளியாகும் இந்தத் தேர்வு முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலினால் இந்த வருடம் மே மாதம் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.

ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள்

ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வை தமிழகம் முழுவதிலும் சுமார் 8,01,772 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில், மாணவிகள்  4,35,176 பேரும், மாணவர்கள்  3,66,596 பேரும் தேர்வு எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும்  உள்ள 7,276 மேல்நிலைப் பள்ளிகளில் 2,634 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்றுள்ளன.

ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள்

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களிலும் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.  இதில், ஈரோடு மாவட்டம் 98 சதவிகிதத்துடன் முதலிடத்தையும், திருப்பூர் மாவட்டம் 97.9 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 97.6 சதவிகிதத்துடன் மூன்றாம்  இடத்தையும் பிடித்துள்ளது. 

ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள்

இதைத் தவிர, தமிழகம் முழுவதும் மொத்தமாக 2,896 மாற்றுத் திறனாளிகள் பொதுத் தேர்வு எழுதி, அதில் 2,721 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், இந்த வருடம் 78 சிறைக்கைதிகள் ப்ளஸ் ஒன் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 62 பேர் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். 

மாவட்ட வாரியாக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் : 

ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள்