மலைக்கோட்டைக்குப் பக்கத்தில் ஒரு செம ஷாப்பிங் ஸ்பாட்... திருச்சி ஹைலைட்ஸ் #MyVikatan | Shopping spot near Tiruchirappalli Rock fort

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (08/05/2019)

கடைசி தொடர்பு:12:13 (10/05/2019)

மலைக்கோட்டைக்குப் பக்கத்தில் ஒரு செம ஷாப்பிங் ஸ்பாட்... திருச்சி ஹைலைட்ஸ் #MyVikatan

தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கும் திருச்சி, எப்போதும் பலரின் மனத்தைக் கொள்ளை கொள்ளும். காவிரி பாய்ந்தோடுவதைப் பார்த்தாலே பரவசம் அள்ளும். திருச்சி, மதங்களைக் கடந்த மனிதர்கள் வாழும் ஊர். ஶ்ரீரங்கம் கோயிலுக்கு வருபவர்கள், மலைக்கோட்டை, நத்தர்ஷா பள்ளிவாசல், செயின்ட் ஜோசப் சர்ச் வாசல்களில் நின்றுகொண்டு அப்படியே ஒரு செல்ஃபி எடுத்தபடி நகர்வார்கள்.

மலைக்கோட்டை

ஹாலிடே என்றாலே  இந்தக் காட்சிகளை திருச்சிக்குள் அதிகமாகப் பார்க்கலாம். புதுமணத் தம்பதிகள், காதல் ஜோடிகள் மட்டுமல்லாமல், குடும்பம் குடும்பமாகக் கையில் காசு சேர்ந்தாலே ஒரு எட்டு திருச்சி மலைக்கோட்டை பக்கம் விசிட் அடித்துவிட்டுப் போவதுண்டு. கூடவே, 273 அடி உயரத்தில் திருச்சி மலைக்கோட்டை மேல் உள்ள தாயுமானசுவாமி கோயிலுக்குச் செல்ல 417 படிகளைக் கடந்து, மலையின் உச்சியில் நின்று ரசித்தால், அவ்வளவு அலாதி சுகம்.

மலைக்கோட்டை


அப்படி ரசிக்கவே, திருச்சிவாசிகள் மட்டுமல்லாமல் தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை எனப் பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள்  ஜாலியாக ஷாப்பிங்க்  வருவதுபோல், திருச்சி மலைக்கோட்டைக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு, திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து காந்தி மார்க்கெட் வரை காலாற நடந்தவாறு, கம்மியான விலையில் கைநிறைய ஷாப்பிங் செய்துவிட்டுச் செல்கிறார்கள். அவ்வளவு கடைகள், அத்தனையும் செம வெரைட்டீஸ்.