ஒய்யாரமாய் ஒரு ரிக்‌ஷா ரைய்டு! - இது புதுச்சேரியின் அடையாளம் #MyVikatan | Foreigners loves Puducherry  rickshaw ride 

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (08/05/2019)

கடைசி தொடர்பு:12:02 (10/05/2019)

ஒய்யாரமாய் ஒரு ரிக்‌ஷா ரைய்டு! - இது புதுச்சேரியின் அடையாளம் #MyVikatan

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப காலத்தில் புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளுக்கு ஆமை வேகத்தில் செல்லும் `சைக்கிள் ரிக்‌ஷா' பயணம் என்றால் கொள்ளை பிரியம்.

ரிக்‌ஷா
 

பல கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் வைத்திருக்கும் முதலாளிகள்கூட இந்த சைக்கிள் ரிக்‌ஷா பயணத்தை ஆனந்தமாக எண்ணுகின்றனர். புதுச்சேரியின் `வெள்ளை நகர'ப் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் உள்ளன. 10 ரூபாய்க்கு சவாரிக்கு அழைத்தால்கூட மறுக்காமல் வருவார்கள்.

ரிக்‌ஷா

சில ரிக்‌ஷாக்களில் பாடல் (பேட்டரி மூலம்) போடுவதால் நபருக்கு ரூபாய் 2 கட்டணம் அதிகம். வெள்ளை நகரப் பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளை ஒரு மணி நேரத்தில் சுற்றிவர நபர் ஒருவருக்கு ரூபாய் 80 கட்டணம் வசூலிக்கின்றனர். புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இந்த ரிக்‌ஷாக்களில் பயணம் செய்வது இயல்பு. சில நேரங்களில் ரிக்‌ஷாக்காரர்களை அமர வைத்து வெளிநாட்டினர் சைக்கிள் ரிக்‌ஷாக்களை தாங்களே ஒட்டிக்கொண்டு நகர்வலம் வருவதையும் காணலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க