மிளகாய்க்குள்ளே ஒரு மினி அஞ்சறைப்பெட்டி... நாவூறவைக்கும் ராமநாதபுரம் அடைச்ச மிளகாய்' #MyVikatan | Ramanathapuram special dish 

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (08/05/2019)

கடைசி தொடர்பு:18:10 (10/05/2019)

மிளகாய்க்குள்ளே ஒரு மினி அஞ்சறைப்பெட்டி... நாவூறவைக்கும் ராமநாதபுரம் அடைச்ச மிளகாய்' #MyVikatan

அடைச்ச மிளகாய்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் மிளகாய்க்கென தனிச் சிறப்பு உண்டு. காரம் மிகுந்த காய்ந்த மிளகாய், குடமிளகாய், வத்தல் மிளகாய் என எல்லா வகையிலான மிளகாய்களும் விளைவிக்கப்படுகின்றன.

அடைச்ச மிளகாய்

இவ்வாறு விளையும் குடமிளகாய்களைக் கீறி ,அதனுள் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக மல்லி, சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவை கலந்த மசாலா பொடியை மிளகாயினுள் அடைத்து, 'அடைச்ச மிளகாய்' என்ற பெயரில் விற்பனை ஆகிறது. இந்த மிளகாயை எண்ணெய்யிட்டுப் பொறித்து, உணவுடன் சேர்த்து உண்டால் அலாதி ருசிதான். அடுப்படியிலிருந்து அஞ்சறைப் பெட்டிகள் எல்லாம் மறைந்துவிட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் அஞ்சரைப் பெட்டியாகத் திகழ்கிறது, இந்த 'அடைச்ச மிளகாய்'.