வெளிநாட்டுப் பறவைகள் இளைப்பாறும் `குளு குளு’ ஸ்பாட் - இது விருதுநகர் `வேடந்தாங்கல்’ #MyVikatan   | Do you know about Virudhunagar bird sanctuary

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (08/05/2019)

கடைசி தொடர்பு:12:16 (10/05/2019)

வெளிநாட்டுப் பறவைகள் இளைப்பாறும் `குளு குளு’ ஸ்பாட் - இது விருதுநகர் `வேடந்தாங்கல்’ #MyVikatan  

விருதுநகர் மாவட்டம் என்றால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது வறட்சிதான். அப்படிப்பட்ட வறண்ட பூமியில் பறவைகள் விரும்பக் கூடிய ஒரு சரணாலயம் அமைந்திருப்பது அதிசயம்தான். சாத்தூர் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் கிராமம்தான் அந்தச் சரணாலயம்.

பறவைகள் சரணாலயம்

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இரை தேடியும், இனப்பெருக்கம் செய்வதற்காகவும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருகின்றன.

பறவை சரணாலயம்
 

பறவைகளின் உணர்வுகளை புரிந்து கொண்ட அந்த கிராம மக்கள் பறவைகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் கொடுத்து வருகின்றனர். கண்மாயையொட்டியுள்ள வேப்பமரம், புளியமரங்களிலேயே தங்கிவிடுகின்றன. யாரையும் வேட்டையாட அனுமதிப்பதில்லை. அருகிலேயே பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும்கூட  பறவைகளின் நலன்கருதி இந்த கிராம மக்கள் பட்டாசுகளை கூட வெடிப்பதில்லை. இதனால் பறவைகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன. ஆனாலும் பறவைகளுக்கு தேவையான எந்தவித வசதிகளும் இல்லை. நம் ஊரைத் தேடி வரும் பறவைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.