`பொது இடத்துல நின்னு எதிர்ப்பைத் தெரிவிக்கணும்னு நினைக்கிறா!'- மகள் குறித்து சின்மயி அம்மா | ''She never protests against the law'' says Playback singer Chinmayi's mother

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (08/05/2019)

கடைசி தொடர்பு:16:32 (08/05/2019)

`பொது இடத்துல நின்னு எதிர்ப்பைத் தெரிவிக்கணும்னு நினைக்கிறா!'- மகள் குறித்து சின்மயி அம்மா

ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, `ரஞ்சன் கோகாய் மீது வெளிப்படையான விசாரணை நடத்தவும் அவர் தன்னுடைய பதவியிலிருந்து விலக வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட் பெண் வக்கீல்களும், பெண்கள் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இவர்களைப் போல பாடகி சின்மயியும் தன் எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக ட்வீட் செய்திருந்தார். இது தொடர்பாக பேசுவதற்கு அவரைத் தொடர்பு கொண்டோம். அவருடைய அம்மா பத்மாஷினி பேசினார். 

சின்மயி தன் அம்மாவுடன்

``பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள் என் காலத்துலேயும் இருந்துச்சு. எனக்கு முன்னாடி காலத்துலேயும் இருந்துச்சு. எல்லா காலத்துலேயும் இருக்கும். இதுக்கு நீ மட்டும் ஏன்டி போராடுறே, தேமேன்னு உன் வாழ்க்கையைப் பார்த்துட்டு நிம்மதியா இருன்னு எப்பவோ சின்மயிகிட்ட சொல்லிட்டேன். ஆனா, அவ மனசுல ஒரு காயம் தழும்பா மாறியிருக்கு, என்ன செய்ய..? மீ டூ விஷயத்தை சின்மயி கையில் எடுக்கும்போதே, `இதை காவல்துறைகிட்டேயும் சட்டத்துக்குக்கிட்டேயும் கொண்டு போகாதே. மீடியாகிட்டே கொண்டு போ'ன்னுதான் சொன்னேன். அவ மத்த பெண்களுக்காகவும் போராடணும்னு நினைக்கிறா.. இதோ, இப்ப சீஃப் ஜஸ்டிஸ் மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதால, ஒரு பொது இடத்துல நின்னு தன் எதிர்ப்பைத் தெரிவிக்கணும்னு நினைக்கிறா. அதை எந்த இடத்துல பண்ணலாம்னு பேசிட்டிருக்கா. அதுக்கான பர்மிஷன் காவல்துறையிடமிருந்து கிடைச்சா செய்வா. அவ சட்டத்தை மீறி எதையும் செய்ய மாட்டா. ஆனா, எனக்கு நல்லா தெரியும், அவளுக்கு பர்மிஷன் கிடைக்காது. 

ஒரு அம்மாவா சொல்றேன். ஆண் இன்னொரு ஆணை விட்டுக் கொடுக்கிறதே இல்லை. அதே மாதிரி பெண்கள்  நாமும் ஒத்துமையா இருக்கணும். ஒரு பொண்ணுக்கு பிரச்னைன்னா மொத்தப் பேரும் எதிர்ப்புக் குரல் கொடுக்கணும்; விட்டுக் கொடுக்கக் கூடாது. இது நடந்தா, என்னை மாதிரி பெரியவங்க எல்லாம் மனசு குளிர்ந்து செத்துப் போவோம். இல்லைன்னா, `என் பொண்ணே இவ்வளவு கஷ்டப்படறாளே, என் பேரன், பேத்தியெல்லாம் இந்த உலகத்துல எப்படிக் கஷ்டப்படுவாளோன்னு மனசு நொந்துக்கிட்டேதான் சாகணும்'' என்றார் சின்மயி அம்மா.