சாம்பல் நிற அணில்களின் கீச் கீச்... ஜில்லென்ற மலையடிவாரம்!- ஸ்ரீவில்லிபுத்தூர் ட்ரிப்புக்குத் தயாரா? #MyVikatan | Grizzled Squirrel Wildlife Sanctuary  at Virudhunagar        

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (08/05/2019)

கடைசி தொடர்பு:12:16 (10/05/2019)

சாம்பல் நிற அணில்களின் கீச் கீச்... ஜில்லென்ற மலையடிவாரம்!- ஸ்ரீவில்லிபுத்தூர் ட்ரிப்புக்குத் தயாரா? #MyVikatan

அணில்களில் சற்று பெரிய அளவு கொண்டது சாம்பல் நிற அணில். இந்த அணில்களை அழியாமல் பாதுகாக்கும் வகையில் 26.12.1988-ம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைக்கப்பட்டது.

அணில் சரணாலயம்
 

480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த சரணாலயம் உள்ளது. சரணாலயத்தின் மேற்குப் பகுதியில் பெரியார் புலிகள் காப்பகம், வடக்கில் மேகமலை வன உயிரின கோட்டம், தெற்கில் திருநெல்வேலி வன உயிரின சரணாலயம் ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. இது அணில்களுக்கான சரணாலயமாக இருந்தாலும்கூட யானை, காட்டெருமை, புலி, மான், வரையாடு, மந்தி, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளும், ஏராளமான பறவையினங்களும் இங்கே வசித்து வருகின்றன. முதுகுப்பகுதி சாம்பல் நிறத்திலும், மூக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், அடர்த்தியான முடியுடன் வால் மிக நீண்டும் காணப்படும் இந்த அணிலைப் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். பெரும்பாலும் இந்த அணில்கள் மரத்தின் உச்சியிலேதான் இருக்கும்.

அணில் சரணாலயம்
 

மேற்குத் தொடர்ச்சி மலையில் மரங்கள் சூழ்ந்துள்ள குளிர்ச்சியான அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இயற்கை மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கும், வனவிலங்குகள் மேல் அக்கறை கொண்டவர்களுக்கும் மிக முக்கியமான இடம். இங்கே வனத்துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் ஏராளமான பறவை மற்றும் விலங்கினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.