புதுச்சேரி மக்களின் ஃபேவரைட் கடவுள் `பாய் முருகர்’! - கௌஸ் கோயில் பின்னணி #MyVikatan | Pondicherry  is famous  for Ghouse Murugan temple  

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (08/05/2019)

கடைசி தொடர்பு:12:03 (10/05/2019)

புதுச்சேரி மக்களின் ஃபேவரைட் கடவுள் `பாய் முருகர்’! - கௌஸ் கோயில் பின்னணி #MyVikatan

புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று ரயில் நிலையத்துக்கு எதிரில் உள்ள `கௌசிக பாலசுப்பிரமணியர்’ கோயில். 

கௌஸ் கோயில்

இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் முகமது கௌஸ். மதங்களைப் பற்றிய எந்தப் புரிதலும் ஏற்பட்டிருக்காத அவரது குழந்தைப் பருவத்திலேயே முருகக் கடவுள் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. மசூதிக்குச் செல்லும் நேரங்களைத் தவிர்த்து இந்துக் கோயில்களுக்குச் சென்று மணிக்கணக்கில் முருகனை ரசிக்க ஆரம்பித்தார் கௌஸ்.

கௌஸ் கோயில்
 

படிப்பில் நாட்டம் செல்லாததால் 8-ம் வகுப்புடன் இவரது பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்தது. தனது இடுப்பில் இருந்த தங்க அரைஞாண் கயிற்றை விற்று, வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி தரும் செப்புச் சிலையை வாங்கி வழிபடத் தொடங்கினார். ஒவ்வொரு வருடமும் புதுச்சேரி கடற்கரையில் நடக்கும் மாசிமகத் திருவிழாவின்போது, முருகனின் சிலைக்கு அலங்காரங்கள் செய்து, தனது தோளில் சுமந்து சென்று புனித நீராட்டு செய்வது இவரது வழக்கம். மேலும் கௌஸின் முருகன் சிலையை `பாய் முருகர்' என்றே புதுச்சேரி மக்கள் அழைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் முருகக் கடவுளுக்கென்று தனியாக ஒரு கோயிலைக் கட்ட வேண்டும் என்ற அவரது ஆசை, வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது. இவரது நடவடிக்கைகளைக் கவனித்த அப்போதைய புதுச்சேரி மேயர் எதுவார் குபேர், “உனக்கு வேறு ஏதேனும் உதவிகள் வேண்டுமா” எனக் கேட்க, முருகனுக்குக் கோயில் கட்டும் தனது ஆசையைத் தெரிவித்தார். 

ஆளுநர் பி.டி.ஜாட்டி அடிக்கல் நாட்ட கோயில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கோயிலைப்பற்றி அறிந்து வருகை தந்த காஞ்சி சங்கராச்சாரியார் ``கௌசிக பால சுப்ரமணியர் திருக்கோவில்” என்று பெயரிட்டார். அன்றிலிருந்து ``கௌஸ் கோயில்” என்று அழைக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு காரணமாக 2003-ல் கௌஸ் உயிரிழந்தார். அவருக்குப் பிறகு கோயில் நிர்வாகத்தை அவரது மகன் முகமது காதர் கவனித்து வருகிறார். இன்றும் கோயிலின் உட்பிரகாரத்தில் முகமது கௌஸ் அவர்களின் திருவுருவப் படத்தைக் காணலாம்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க