``தி.மு.க-வுக்கு வாழ்த்து...சென்னை மாநகராட்சியின் ரகசிய பாஷை...” - யார்கிட்டயும் சொல்லாதீங்க! | exclusive news about State officials

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (09/05/2019)

கடைசி தொடர்பு:12:37 (09/05/2019)

``தி.மு.க-வுக்கு வாழ்த்து...சென்னை மாநகராட்சியின் ரகசிய பாஷை...” - யார்கிட்டயும் சொல்லாதீங்க!

தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும், தலைமைச் செயலகம் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை இங்கு தொகுத்துள்ளோம்...

வாக்குப்பதிவு

ருத்துக் கணிப்புகளை அரசின் உயர் அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்துவருகிறார்கள். தி.மு.க-வுக்கு சான்ஸ் வரும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. அதனால், இப்போதிலிருந்தே தி.மு.க மேலிடத் தலைவர்களில் ஆரம்பித்து முக்கியப் பிரமுகர்களுக்கு போனில் வாழ்த்து சொல்லிவருகிறார்களாம். பிரைவேட் காரில் போய் தி.மு.கழக பிரமுகர்களை ரகசியமாகச் சந்தித்து கைகுலுக்குகிறார்களாம். 'இந்த ஆட்சி பற்றி என்ன தகவல் வேண்டும்... நான் தருகிறேன்' என்று காதோரம் சொல்லிவிட்டு வருகிறார்களாம். 

மிழக மக்களே...சென்னைத் தலைமைச் செயலகம் பக்கமே போகாதீர்கள். இதுவரை 59 நாள்கள். இனி வரும் 19 நாள்கள்..ஆக, 78 நாள்கள் தலைமைச் செயலகம் மட்டுமல்ல... தமிழகத்தின் எந்த அரசு அலுவலகங்களுக்குப் போனாலும் காரியம் நடக்காது. டேபிளில் ஃபைல்களைப் பார்த்தபடி, அரசு அதிகாரிகள் தேமே என்று உட்கார்ந்திருப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து, கடந்த மார்ச் 10 -ம் தேதியன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதி தமிழகத்தில் அமலுக்கு வந்தது. மே 27 -ம் தேதிய வரை அந்த விதி அமலில் இருக்கும். இடைப்பட்ட நாள்கள் 78. எஞ்சியிருக்கும் நாள்கள் 19. இந்தக் காலகட்டத்தில், அரசு அலுவலகங்களில் எந்த ஒரு  ஃபைலும் கையெழுத்து ஆகாது. தலைமைச் செயலகம் தற்போது வெறிச்சோடிக்கிடக்கிறது. அரசின் முக்கிய மக்கள் நல திட்டங்களை அமல்படுத்தும் உயர் அதிகாரிகள் தரப்பில் பெயருக்கு வருகிறார்கள். போகிறார்கள். ரெகுலராக நடக்கும் அத்தியாவசியப் பணிகள் தவிர, மக்களுக்கான எந்தப் புதுத் திட்டம் தொடர்பான ஃபைல் மூவ்மென்ட் ஏதும் நடப்பதில்லை. இது, தேர்தல் கமிஷன் உத்தரவு. தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மட்டும்தான் தினமும் 12.30 பிரஸ்மீட் நடத்துகிறார். வேறு எந்த ஐஏஎஸ் அதிகாரிகளும் சரி, அமைச்சர்களும் சரி...மீடியாக்களைக் கண்டாலே ஒதுங்கிப்போகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ -க்கள், எம்.பி -க்கள் அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கின்றன. தேர்தல் ரிசல்ட் வந்தபிறகுதான், கதவைத் திறந்துவிடுவார்கள். 

பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ரிசல்ட்டுகள் ஆளுங்கட்சியின் அஸ்திவாரத்தைப் பதம்பார்க்க இருப்பதால், உயர் பதவியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் பீதியில் இருக்கிறார்கள். தேர்தல் களத்தில், முதல்வரில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை பிஸியாக இருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில உயர் அதிகாரிகள், தங்களுக்கு `தாராளம்’ காட்டுகிறவர்களுக்கு மார்ச் 10 -ம் தேதிக்கு முந்தைய தேதியிட்டு ஃபைல்களில் `தாராளம்’ காட்டுகிறார்களாம். இது முதல்வருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.     


தலைமை செயலகம்

மிழகத்தின் பிரெய்ன் என்று சொன்னால், அது சென்னை தலைமைச் செயலகம்தான்! 38 துறைகள், 7000 -க்கும் மேலான பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். தமிழக மக்களுக்கான அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதும், முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதும் இங்குள்ள அதிகாரிகள்தான். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிராயர் மாளிகையில் 10 மாடியில் அரசுத்துறை செயலர்கள் அலுவலகங்கள் இருக்கின்றன. மற்ற அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு, கண்டிப்பாகப் பணி மாறுதல் உண்டு. ஆனால், தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குப் பணி மாறுதல் என்பதே கிடையாது. பணிக்காலம் முழுக்க இதே வளாகத்தில் உள்ள ஏதாவது ஒரு துறையில் மாறி மாறி பணிபுரிவார்கள். இந்தப் பணியாளர்களுக்கென்று பழைமையான கட்டடத்தில் `டான்சா’ எனப்படும் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் இயங்கிவந்தது. கடந்த சில நாள்களாக, அந்தச் சங்க அலுவலகம் தலைமைச்செயலகத்தின் 10 மாடி கட்டடத்தில் தரைதளத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டிருக்கிறது. காரணம், பழைய கட்டடத்தில் நிறைய விரிசல்கள்.

மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுக்கும். இதைச் சரிசெய்யச் சொல்லி சங்கத்தினர் அரசு மேலிடத்திடம் வற்புறுத்திவந்தனர். தற்போது, ஆறு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சங்கத்தின் தற்போதைய தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கட்டடத்தின் மோசமான நிலையை அரசு உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லி, புரியவைத்து, புதுப்பிக்க ஓ.கே வாங்கியிருக்கிறார்.  

12 லட்சம் அரசு ஊழியர்கள், 6 லட்சம் பென்ஷன்தாரர்கள். இவர்களின் நிர்வாகத்தை கவனிக்கும் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர், பணியில் சுறுசுறுப்பாக இல்லாமல் செயல்படுவதைப் பார்த்து கடும் எரிச்சலில் இருக்கிறார்கள் அரசு ஊழியர்கள். அவரது குழந்தை பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் நேரத்தில், இவர் பறந்தோடிப் போய் வீட்டில் ஆஜராகிவிடுவாராம். அவ்வளவு பாசமாம். இவரின் கையெழுத்துக்காக பல்லாயிரம் பேர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஃபைல்கள் அவரிடம் குவிந்துகிடப்பது பற்றியெல்லாம் கவலைப்படுவதேயில்லையாம். சில நேரம் சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் அந்த அதிகாரியிடம் அவசரமாகக் கேட்கும் விவரங்களைக்கூட உடனடியாகத் தருவதில்லையாம். காரணம், உச்ச அதிகாரியின் ஆசி இவருக்கு இருப்பதால், எதற்கும் கவலைப்படுவதில்லையாம். 

லைமைச் செயலகத்தில் 250 பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன. அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருக்கவேண்டிய இடத்தில் இப்படி ஒரு சீர்கேடு. கடந்த 18 வருடங்களாக தலைமைச் செயலகத்தின் செக்ஷன் ஆபீஸர்கள், அண்டர் செகரட்டரி ஆகியோரின் பதவி உயர்வு தொடர்பான வழக்கு நீதிமன்ற நிலுவையில் இருக்கிறது. ஒரே நேரத்தில் தலைமைச் செயலகப் பணியில் நுழைந்த தட்டச்சர், உதவியாளர்கள்... இவர்கள் பதவி உயர்வில் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் முரண்பாடு நிலவுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்துக்குப் பிரச்னை போனது. நீதிமன்றம் எந்த ஒரு டைரக்ஷனும் தராத நிலையில், வழக்கமாகத் தரவேண்டிய பதவி உயர்வுகளை நிறுத்திவைத்துள்ளார் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர். செக்ஷன் ஆபீஸர்கள் 50, அண்டர் செகரட்டரிகள் 100, உதவியாளர்கள் 120, முது நிலை தட்டச்சர்கள் 70, தட்டச்சர் 75, டிரைவர்கள் 25, ரிக்கார்டு கிளார்க்குகள் 30 என்று சுமார் 400 பேர்கள் பதவி உயர் விவகாரத்தில் சிக்கித்தவிக்கிறார்கள். இதேபோல், அண்டர் செகரட்டரி டு டெபுட்டி செகரட்டரி, டெபுட்டி செகரட்டரி டு ஜாயின்ட் செகரட்டரி, ஜாயின்ட் செகரட்டரி டு கூடுதல் செகரட்டரி ஆகியோர் வகையில், சுமார் 50 பேர்களுக்கு சீனியாரிட்டியை நிர்ணயிப்பது தொடர்பான விவகாரம், நீதிமன்றம் தரப்பில் தமிழக அரசுக்கு உத்தரவு அளித்தும்கூட, அந்த உத்தரவை செயல்படுத்தாமல் எட்டு மாதங்களாக காலங்கடத்துகிறார்கள். ஜாயின்ட் செகரட்டரி, கூடுதல் செகரட்டரி அளவில் 16 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதையெல்லாம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உரிய நேரத்தில் முதல்வரிடம் எடுத்துச்சொல்லி, நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரும் மெத்தனம் காட்டுகிறார். இவரைப்போலவே, பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறைச் செயலாளரும் மௌனம் காக்கிறாராம். பணியாளர்கள் சீர்திருத்தத் துறையானது படிப்படியாகச் சீர்கேட்டத் துறையாக மாறிவிட்டதை நினைத்து, தலைமைச் செயலக அதிகாரிகள் நிம்மதி இழந்து தவிக்கிறார்களாம். இவையெல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டைத் தலைமைச் செயலகப் பணியாளர்கள் எடுக்கக் காரணமாம்.  

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒருவருக்கொருவர் போனில் பேசிக்கொள்ளும்போது, அ.தி.மு.க, தி.மு.க இருவரையும் ரகசிய சங்கேத பாஷையில் `மாமன் - மச்சான்’ என்று பேசிக்கொள்கிறார்கள். மாநகராட்சி சட்டவிரோத கட்டடங்கள், டெண்டர்கள், கான்ட்ராக்ட் வேலைகள்...இவற்றில் ஏதாவது ஒரு பேனரில் மாமூல் கேட்டு முதலில் மாமன் பேசுவாராம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், `பாரேன்... அடுத்த ஐந்தாவது நிமிடம் மச்சான் போன் லையனில் வருவார்’ என்று கிண்டலாகச் சொல்லி முடிப்பதற்குள் மச்சான் லையனில் வந்துவிடுகிறாராம். அந்த அளவுக்கு மாமூல் வசூலிப்பதில் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாகச் செயல்படுகிறார்களாம். கவுன்சிலர்கள் இல்லாத குறையை, அந்தந்த ஏரியா வட்ட, பகுதி, மாவட்டச் செயலாளர்கள் வசூல் வேட்டை நடத்துகிறார்களாம். உதாரணத்துக்கு, வடசென்னையில் ஒரு கான்ட்ராக்டர் மாநகராட்சி வேலையை முறைப்படி எடுத்தாராம். தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகள், ஜாதி அமைப்புகள், அதன் கிளை நிர்வாகிகள்... என்று 32 கவரில் மாமூலைப் போட்டு ரெடி பண்ணச் சொன்னார்களாம் அதிகாரிகள். இவையெல்லாம் சரியாக பட்டுவாடா ஆனால்தான், வேலையைத் தொடங்கமுடியும் என்று சொல்லிவிட்டார்களாம். ஏற்கெனவே வேலையை ஒதுக்கும்போதே 10% அதிகாரிகளுக்கு தனி கமிஷன். இவை போக, அரசியல் கட்சிகளுக்கு கமிஷன்...எல்லாவற்றையும் கூட்டினால் 35% கமிஷன் கொடுக்கவேண்டிவருகிறதாம். பிறகு எப்படி கான்ட்ராக்ட் வேலையை ஸ்ட்ராங்காகக் கட்டமுடியும்... என்று நடுநிலையாளர்கள் வினா எழுப்புகிறார்கள். 

மிழகத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இரண்டு அதிகாரிகள், ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்களாம். அளவு கடந்த நெருக்கம். உயிர் நண்பர்களாம். பாசத்துக்கு அடையாளமாக, முதலாமவரின் குழந்தைக்கு இரண்டாமவர் பெயராம். இரண்டாமவரின் குழந்தைக்கு முதலாமவர் பெயராம். `இதென்ன குற்றமா? டேக் இட் ஈஸி’ என்கிற முறையில் இரண்டு வீட்டுக்காரர்களும் இதைப் பெரிசா எடுத்துக்கொள்ளவில்லையாம். ஆனால், சக அதிகாரிகள் அதிர்ச்சியுடன் பேசிக்கொள்கிறார்கள். 

போர்வெல்

சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. பொது மக்கள் யாராவது போர்வெல் தோண்ட வேண்டுமானால், அந்தப் பகுதி ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு பத்தாயிரம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும். கப்பம் கட்டச் சொல்லி, மாநகராட்சி அதிகாரிகளே சம்பந்தப்பட்ட மக்களிடம் கேன்வாஸ் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை!