மன அமைதி தரும் திடியன் மலை! - மதுரையின் சில்லிங் ஸ்பாட் #MyVikatan | Thidiyan Malai is an chilling spot at Madurai  

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (09/05/2019)

கடைசி தொடர்பு:12:19 (10/05/2019)

மன அமைதி தரும் திடியன் மலை! - மதுரையின் சில்லிங் ஸ்பாட் #MyVikatan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த திடியன் மலை மிகப்பெரும் ஆன்மிக ஸ்தலம். திருவண்ணாமலையில் கிடைக்கும் புண்ணியம் இங்கேயும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

திடியன் மலை
 

இந்த மலையைச் சுற்றிவந்தால் உடல் பருமன் உள்ளவர்கள் மெலிந்துவிடுவதாகவும், கோயில் குளத்தில் உள்ள கூழாங்கற்களை வாயில் போட்டுக்கொண்ட பின் மந்திரங்கள் கூறிக்கொண்டு மலையைச் சுற்றிவந்தால் சரியாக வாய் பேச வராதவர்களுக்குப் பேச்சு நடை சரியாகும், தீய சொற்கள் பேசும் நபர்கள் மாறுவார்கள் என்றும் நம்பிக்கை கொண்டு பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். தெப்பம், மலை, மலையின் அடிவாரத்தில் அழகிய கோயில்கள் என்று கிராமமே எழில் கொஞ்சியபடி காட்சியளிக்கும். மலை ஒரு பிரமாண்ட லிங்க வடிவில் அமைந்திருக்கும். இங்குப் பல சிறப்புகள் உள்ளன.

திடியன் மலை
 

தடித்த வார்த்தை ( தீய சொற்கள் ) பேசிய தடியர்கள் சாபம் பெற்றுள்ளனர். அதன் சாப விமோசனம் பெற கோயில் தாமரைக் குளத்தில் இருந்த கூழாங்கற்களை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மலையை கிரி வலம் வந்துள்ளனர். அதன் பிறகு தல விரித்த மரத்திற்குக் கீழ் அமர்ந்து விமோசனம் அடைந்துள்ளனர். தடியர்கள் விமோசனம் பெற்றதால் திடியன் மலை என்று பெயர் மாறியுள்ளது .