ஆண்களே வீட்ல விசேஷமா? சேலம் கிளம்புங்க; மங்களகரமா ஷாப்பிங் செய்யுங்க! #MyVikatan  | Salem is famous for pure silk

வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (09/05/2019)

கடைசி தொடர்பு:11:52 (10/05/2019)

ஆண்களே வீட்ல விசேஷமா? சேலம் கிளம்புங்க; மங்களகரமா ஷாப்பிங் செய்யுங்க! #MyVikatan 

பெண்கள் உடுத்தும் பட்டுச் சீலைக்கு காஞ்சிபுரம் புகழ் பெற்றதைப் போல ஆண்கள் உடுத்தும் வெண்பட்டுக்குச் சேலம் புகழ் பெற்றது. இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் மட்டுமே வெண்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம் வெண்பட்டு
 

சேலம் வெண்பட்டின் தனித்தன்மைக்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வெண்பட்டிலிருந்து வேட்டிகள், சர்ட்டுகள், அங்கவஸ்திரங்கள் செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் மங்களகரமான விசேஷங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. 
இங்கு தயாரிக்கப்படும் ஒரு வெண்பட்டு வேட்டி 3,000 முதல் 15,000 வரை மதிப்புடையது. சேலம் வெண்பட்டு உற்பத்தியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.

சேலம் வெண்பட்டு

சேலம் வெண்பட்டைப் போலவே தயாரிக்கக் காஞ்சிபுரம், கும்பகோணம், தஞ்சை, திருபுவனம் போன்ற பகுதிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சேலம் வெண்பட்டைப் போல பினிசிங் வரவில்லை. காரணம் சேலத்தின் தட்ப வெட்ப நிலையும், நீரின் தன்மையும் வெண்பட்டு உற்பத்திக்கு உகந்ததாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் வெண்பட்டுத் துணிகள் மட்டும் நல்ல பினிசிங் இருக்கிறது. இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களின் வளர்ச்சிக்காகச் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.