தொழுநோயாளிகளுக்குத் தொண்டுசெய்ய வாழ்க்கையை அர்ப்பணித்த திருவண்ணாமலை இளைஞர்! #HatsOff #MyVikatan | Thiruvannamalai Youngster serving leprosy affected people

வெளியிடப்பட்ட நேரம்: 08:07 (10/05/2019)

கடைசி தொடர்பு:18:07 (10/05/2019)

தொழுநோயாளிகளுக்குத் தொண்டுசெய்ய வாழ்க்கையை அர்ப்பணித்த திருவண்ணாமலை இளைஞர்! #HatsOff #MyVikatan

பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை உதறித்தள்ளி வீட்டைவிட்டுத் துரத்தும் இந்தக் காலத்தில், முகமறியாத தொழுநோயாளிகள், ஆதரவற்றோரை அன்புடன் அரவணைப்பவர்கள் சிலர் இருப்பதால்தான், இன்னும் மனிதநேயம் மரித்துப்போகாமல் இருக்கிறது. அதுபோன்ற இளைஞர்தான் மணிமாறன்.

மணிமாறன்
 

திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் சிறுவனாக இருந்தபோது, அவருடைய பெற்றோர் நிறையப் பேருக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர். அதைப் பார்த்த பின், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை மணிமாறனுக்கும் வந்துவிட்டது.   தொழுநோயாளிகளுக்குத் தொண்டுசெய்யும் எண்ணம் வந்ததற்குக் காரணம், அன்னை தெரசாதான் என்கிறார் மணிமாறன். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகளுக்கு சேவை செய்துள்ளார் . 1,500-க்கும் அதிகமானோரை குணமாக்கி, பழைய நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளோம் என்கிறார். ஆதரவற்ற முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், குழந்தைகள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரை மீட்டுள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களுக்கும் சென்று சமூக சேவைகளைச் செய்துவருகிறார். 

இளைஞர்மணிமாறன்
 

2008ல், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்தபோது, `தனி மரம் தோப்பு ஆகாது’ என்று கூறியுள்ளார். அதன்பிறகு, `உலக மக்கள் சேவை மையத்தைத் தொடங்கியுள்ளார் மணிமாறன். இந்த அமைப்புக்காக இதுவரை ஒருவரிடம்கூட நிதி வாங்கியதில்லை. உதவியும் கேட்டதில்லை. மருத்துவமனைகளில் அநாதையாக இருந்த 850 உடல்களை மீட்டு அடக்கம் செய்துள்ளார்கள். சமூக சேவைக்காக 50-க்கும் அதிகமான `விருதுகள்’ அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க