ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த ரயில்கள்! - திருமங்கலத்தில் பதறிய பயணிகள் | language problem: Major train accident averted near madurai

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (10/05/2019)

கடைசி தொடர்பு:19:10 (10/05/2019)

ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த ரயில்கள்! - திருமங்கலத்தில் பதறிய பயணிகள்

ரயில்வே அதிகாரிகளின் இந்தி - தமிழ் தகவல் பரிமாற்ற பிரச்னை காரணமாக பெரும் ஆபத்தில் சிக்கிய பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ரயில்

செங்கோட்டையில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கும் இருமார்க்கமாக ரயில்கள் நேற்று மாலை வந்துகொண்டிருந்தன. அப்போது திருமங்கலம் ரயில்வே சிக்னலில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் பீப்சிங் மீனாவுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்திருக்கிறார். நெல்லை ரயிலை அனுமதித்திருப்பதால், மற்ற ரயில்களை அந்தப் பாதையில் அனுமதிக்க வேண்டாம் என ஜெயக்குமார், பீப்சிங் மீனாவிடம் கூறியிருக்கிறார்.  

பயணிகள்

இந்தத் தகவல் பரிமாற்றத்தின்போது இந்தி மற்றும் தமிழ் மொழிப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனால், இருவரும் சரியாக புரிந்துகொள்ளாதபோது ரயில்களை இயக்க அனுமதித்துள்ளனர். இதனால், இரண்டு ரயில்களும் தவறுதலாக ஒரே பாதையில் வந்திருக்கின்றன. வேறு சில அதிகாரிகள் கணித்து இரு ஸ்டேஷனுக்கும் உடனடியாக தகவல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இரு ரயில்களும் கவனிக்கப்பட்டு சிக்கனல்கள் மாற்றி அளிக்கப்பட்டது. அதனால், பெரும் விபத்து ஏற்படாத வகையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்ட பின் கொண்டு செல்லப்பட்டது.

பயணிகள்

இதனால் பயணிகள் அமளியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இரு ரயில்களும் நேற்று இரவு தாமதமாகச் சென்றன.
இந்த நிலையில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின், தவறாக சிக்னல் அளித்த அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.