`அமைச்சர்கள் எஸ்கேப் ஆவார்கள்; இந்த ஆட்சியை கலைக்கப்போறோம்!'- தங்க தமிழ்ச்செல்வன் | In Madurai thanga tamil selvan press meet

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (11/05/2019)

கடைசி தொடர்பு:12:55 (11/05/2019)

`அமைச்சர்கள் எஸ்கேப் ஆவார்கள்; இந்த ஆட்சியை கலைக்கப்போறோம்!'- தங்க தமிழ்ச்செல்வன்

'தி.மு.க-வோடு இணைந்து ஆட்சியைக் கலைக்க முயன்ற ஓ.பி.எஸ் அழிவது உறுதி' என  அ.ம.மு.க கொள்கைப் பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசத்துடன் கூறினார். 

தங்க தமிழ்ச்செல்வன்

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், "தமிழக மக்கள் எங்களுக்கு  ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது வரும் 23-ம் தேதி தெரியவரும். வரும் 23-ம் தேதி, தோல்வியோடு அமைச்சர்கள் காணாமல் போவார்கள். வேறு வழியில்லாமல் பி.ஜே.பி-யோடு இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தற்போது, முதல்வர் மற்றும் துணை முதல்வராக உள்ள ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்-க்கு இடையே மோதல் இருந்துவருகிறது. 22 தொகுதியிலும் அ.ம.மு.க தான் வெற்றிபெறும். டி.டி.வி.தினகரன் தலைமையிலான நல்லாட்சி அமைவதற்காக தற்போதைய ஆட்சியைக் கலைக்கிறோம். இது, துரோகிகளின் கூட்டணி ஆட்சி. கட்டுக்கடங்கா ஊழல் ஆட்சியாக உள்ளது. ஊழலை மையமாகக்கொண்டு இந்த ஆட்சி நடைபெறுகிறது. தி.மு.க-வோடு நாங்கள் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்க, பேரவையில்  தி.மு.க-வோடு ஆதரவு அளிக்க கூட்டணி வைத்த ஓ.பி.எஸ் அழியப்போவது உறுதி. 

மதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

அ.தி.மு.க-வினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்னை உருவாக்க முயல்வதால், அதனைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி தொகுதியில் மறு வாக்குப்பதிவுக்கு யாரும் கேட்கவில்லை. ஆனால், மறு வாக்குப்பதிவு நடக்கும்போதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஓ.பி.எஸ். மகனின் வேட்புமனுவில் பிரச்னை இருப்பதாக ஏற்கெனவே புகார் அளித்துள்ளோம்" என்றார்.