மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் பங்க்குகளில் வேலை... கிரேட் ஜாப் தூத்துக்குடி#MyVikatan | humanity is still alive in thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (11/05/2019)

கடைசி தொடர்பு:17:46 (11/05/2019)

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் பங்க்குகளில் வேலை... கிரேட் ஜாப் தூத்துக்குடி#MyVikatan

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில், 25-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இதில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்குக் காற்று அடிக்கும் பணியில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கடலோரக் கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளில், ஓரளவுக்கு சகஜமாகச் செயல்பட முடிந்தவர்கள், கடல் தொழிலுக்குச் செல்கிறார்கள். அதில், தவழ்ந்து செல்லும் நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, பெட்ரோல் பங்க்குகளில்  காற்று அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களுக்கு காற்று ஏற்றும்போது, சராசரி மனிதர்கள்கூட குனிந்து நிமிரச் சிரமப்படுவார்கள். ஆனால், இவர்களுக்கு அத்தகைய சிரமம் இல்லை. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு,  இரண்டு மூன்று பங்க்குகளில் மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்ட தகவல் அடுத்தடுத்த பங்குகளுக்குப் பரவ, மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பங்க்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க