`ஆத்துல ஃப்ரெஷ்ஷா பிடிச்ச கட்லா மீன் வறுவல் வேணுமா?' - சாத்தனூர் அணைக்கு வாங்க #MyVikatan | Fresh fish selling near sathanur dam

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (11/05/2019)

கடைசி தொடர்பு:20:20 (11/05/2019)

`ஆத்துல ஃப்ரெஷ்ஷா பிடிச்ச கட்லா மீன் வறுவல் வேணுமா?' - சாத்தனூர் அணைக்கு வாங்க #MyVikatan

சாத்தனூர் அணை 1956 ஆம் ஆண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இவ்வணையின் மொத்த நீர் கொள்ளளவு உயரம் 119 அடியாகும்.

சாத்தனூர் அணை

தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும்.  இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும், இயற்கையான சூழலும் சுற்றுலா வருபவர்களுக்கு மகிழ்வூட்டுவனவாக உள்ளன. இங்குள்ள முதலைப்பண்ணையில் 150-க்கும் மேற்பட்ட முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 

சாத்தனூர் அணை

சாத்தனூர் அணையில் பிடிக்கப்படும் கட்லா மீனுக்குத் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் நகரங்களில் வரவேற்பு அதிகம். அந்த அளவிற்குச் சுவையாக இருக்கும். சாத்தனூர் அணைக்குச் சுற்றுலா வருபவர்கள் கட்லா மீனைச் சாப்பிடாமல் வீடு திரும்ப மாட்டார்கள். அங்கு உயிரோடு இருக்கும் மீனை நம் கண்முன்னையே அறுத்து சுத்தம் செய்து மசாலா முழுக்க தடவி எண்ணெயில் போட்டு வறுத்துக் கொடுப்பார்கள். இந்த மீனை சாப்பிடுவதற்காகவே இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவது உண்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க