`தப்புச் செஞ்சா, நேரடியா மன்னிப்புக் கேட்பேன்; அட்மின் செய்தார்னுலாம் சொல்ல மாட்டேன்!' - எஸ்.வி.சேகர் | actor sve shekher talks about actors association

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (11/05/2019)

கடைசி தொடர்பு:22:30 (11/05/2019)

`தப்புச் செஞ்சா, நேரடியா மன்னிப்புக் கேட்பேன்; அட்மின் செய்தார்னுலாம் சொல்ல மாட்டேன்!' - எஸ்.வி.சேகர்

`ராதிகா தலைமையிலோ, டி.ராஜேந்தர் தலைமையிலோ, எஸ்.வி.சேகர் தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு நடிகர் சங்க தலைமைக்கு அமையும்' என நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி அளித்துள்ளார்.

எஸ் வி சேகர்

திருச்சியில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கூட்டம் நடைபெறுகிறது. தற்போது உள்ள நடிகர் சங்கம், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது. நவம்பர் மாதத்திற்குப் பின் நடிகர் சங்கத்தில் நடப்பது அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானதுதான். நான் தவறு செய்தால் நேரடியாக மன்னிப்பு கேட்பேனே தவிர என்னுடைய அட்மின் செய்தார் என்று எல்லாம் சொல்ல மாட்டேன். நடிகர்கள் ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். 

எஸ்.வி.சேகர்

ராதிகா தலைமையிலோ, டி.ராஜேந்தர் தலைமையிலோ,எஸ்.வி.சேகர் தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு  நடிகர் சங்கத்துக்கு அமையும். வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார் விஷால். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை. 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மோடி, மீண்டும் பிரதமராவார். 23ஆம் தேதிக்கு பிறகு அது தெரியும். நாடாளுமன்ற தேர்தலில் தினகரனைக் காட்டிலும் கமல் அதிக வாக்குகளைப் பெறுவார். காஷ்மீரில் தமிழன் அதிகாரியானால் சந்தோஷப்படும் நாம், தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வேலைபெறுவதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?. 7 பேர் விடுதலை, அனிதா தற்கொலை என அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது" எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க