'வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்கப் பார்வையாளர் நியமிக்க வேண்டும்' - ஜி.ராமகிருஷ்ணன் | G.Ramakrishnan speech about release of Rajiv Gandhi assassination convicts

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (12/05/2019)

கடைசி தொடர்பு:08:10 (12/05/2019)

'வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்கப் பார்வையாளர் நியமிக்க வேண்டும்' - ஜி.ராமகிருஷ்ணன்

ஏழு பேர் விடுதலைத் தொடர்பாக இதுவரையிலும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை விடுதலை செய்ய உடனடியாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜி.ராமகிருஷ்ணன்

குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பிறகு தமிழகத்தில் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளன. இதனால் தமிழக தேர்தல் ஆணையாளர் மீது நம்பிக்கை இல்லை. வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு என்னும் பணியை கண்காணிக்க ஒரு உயர்மட்ட அளவிலான பார்வையாளரை நியமனம் செய்ய வேண்டும்.ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா விதித்துள்ள தடை இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தடையை மத்திய அரசு ஏற்கக் கூடாது.

ஜி.ராமகிருஷ்ணன்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அம்மாநில அரசுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தவறானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில் அதற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது ஏற்கக்கூடியது அல்ல. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மாநில அரசு போர்க்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழு பேர் விடுதலைத் தொடர்பாக இதுவரையிலும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களை விடுதலை செய்ய உடனடியாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.