`கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது நாங்கள் மட்டும் தான்!’ - எடப்பாடி பழனிசாமி | Edappadi palanisamy campaign at thiruparankundram

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (12/05/2019)

கடைசி தொடர்பு:08:40 (12/05/2019)

`கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது நாங்கள் மட்டும் தான்!’ - எடப்பாடி பழனிசாமி

100 யூனிட் மின்சாரத்தை இந்தியாவிலேயே இலவசமாக வழங்குவது தற்போதைய அ.தி.மு.க., அரசு தான் என தமிழக முதல்வர் பிரச்சாரத்தில் பேசினார்.

ஈ.பி.எஸ்

திருப்பரங்குன்றம்  சட்டமன்ற இடைத்தேர்தலின் அ.தி.மு.க., வேட்பாளரான முனியாண்டியை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, "அ.தி.மு.க.,வின் கோட்டையாகத் திருப்பரங்குன்றம் விளங்குகிறது. கடந்த இரண்டு முறையும் நாம் தான் வெற்றிபெற்றுள்ளோம். இனியும் நாம் தான் வெற்றி காண்போம். இதில் வேறு நபர்கள் நுழையாமல் பாதுகாப்பது தொண்டர்களான உங்களின் கடமை. தேர்தல் நேரத்தின் போது பல கட்சிகள் வரும் வாக்கு உறுதிகள் கொடுப்பார்கள் ஆனால். அ.தி.மு.க., மட்டுமே கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும். இந்தியாவிலேயே 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கிவருவது தற்போதைய அ.தி.மு.க., அரசு தான். ஆனால் ஸ்டாலின் பொது தேர்தல் போல் தற்போதைய இடைத்தேர்தலில் பேசிவருகிறார்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் தொகுதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வேலை வாய்ப்புகளை இந்த அரசு உருவாக்கிக்கொடுத்துள்ளது. மேலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டாலின் 25 வயது இளைஞர் போல் , செல்லும் இடங்களில் கறுத்து போய் விட்டேன் என்று கூறி வருகின்றார். இதனை எம்.ஜி.ஆர்., கூட சொன்னது கிடையாது. இங்கு கோமாளியாக வேஷம் போட்டு சுற்றி வருகின்றார்.இந்தியாவிலேயே ஷூ போட்டுக் கொண்டு ஏர் உழுதவர் ஸ்டாலின் தான். செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றார்” என்று பேசினார்.