`இந்தத் தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கட்டும்!' - முதல்வருக்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து | tamilisai soundararajan wishes edappadi palanisamy on his birthday

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (12/05/2019)

கடைசி தொடர்பு:14:00 (12/05/2019)

`இந்தத் தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கட்டும்!' - முதல்வருக்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து

``சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய முதல்வர் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று  தமிழிசை வாழ்த்தியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். மே மாதம் 12-ம் தேதி 1954-ம் ஆண்டு பிறந்தவர். 1989-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக திருச்செங்கோடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி 2016-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சரானார். பின் தமிழக முதலமைச்சராக 2017-ம் ஆண்டு பதவி ஏற்றார்.

தமிழிசை

தொடர்ந்து தமிழ முதல்வராக நீடித்துவரும் அவருக்கு இன்று வயது 65. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ``சாமானிய மக்களின் தொண்டராக தன்  அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் வழியில் சாமானிய மக்களுக்கான  திட்டங்களை  நிறைவேற்றி ஏழை,எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி வரும்  தமிழக முதல்வர் அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தாங்கள்  நீண்ட ஆயுளுடன், உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிராத்திக்கின்றேன். இந்த தேர்தல் வெற்றியோடு இன்னும்  பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.