சென்னை மெட்ரோ ரயில் சேவையில் திடீர் தொய்வு - கடும் அவதியடையும் பயணிகள்! | A sudden problem with metro rail service

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (12/05/2019)

கடைசி தொடர்பு:07:53 (13/05/2019)

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் திடீர் தொய்வு - கடும் அவதியடையும் பயணிகள்!

சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று காலையிலிருந்தே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ

கடந்த மாதம் கடைசி வாரத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டது தொடர்பாக  நிர்வாகத்தைக் கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் மூன்று நாள்கள் நீட்டித்ததால் மெட்ரோ ரயில் சேவையில் தொய்வு ஏற்பட்டது. இதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு மீண்டும் சேவை தொடங்கப்பட்டது. இதற்கிடையே, இன்று காலையிலிருந்தே சென்னை மெட்ரோ ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ 

முன்பு ஒரு ரயில் நிலைத்தியத்தில் ரயில்கள் 2 நிமிடத்துக்கும் அதிகமாக நிற்காது. ஆனால் இன்று காலையில் இருந்தே ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் குறைந்தது 10 நிமிடங்களுக்காவது நின்றுதான் ரயில்கள் செல்கின்றன. அதேபோல் பல ரயில் நிலையங்களில் லிஃப்ட், எஸ்கலேட்டர்களும் சரிவர இயங்கவில்லை. இதனால் வயதான பயணிகள், பச்சிளம் குழந்தைகளுடன் வந்தவர்கள் கடுமையான அவதிக்குள்ளானார்கள். விமான நிலையத்துக்குச் செல்பவர்கள், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் போன்ற ரயில்நிலையங்களுக்கு ரயில்களைப் பிடிக்கச் செல்பவர்கள், கோயம்பேடு புறநகர் மற்றும் ஆம்னி பேருந்துகளுக்குச் செல்பவர்கள் சரியான நேரத்துக்குச் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னை மெட்ரோ சேவை ஏற்பட்டுள்ள தொய்வு, பயணிகளை அவதியடைய வைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க