``மறுபடியும் ஜோதிட பலன் சொல்லப் போறேன்... ஆனா டிவியில இல்லை!'' - வீஜே விஷால் | Again iam going to present my jothida palan show to viewers... but not in sun tv says vj vishal

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (13/05/2019)

கடைசி தொடர்பு:13:29 (13/05/2019)

``மறுபடியும் ஜோதிட பலன் சொல்லப் போறேன்... ஆனா டிவியில இல்லை!'' - வீஜே விஷால்

`ஜோதிடபலன்' நிகழ்ச்சி மூலம் ஃபேமஸானவர் வீஜே விஷால். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கும் மேலாக அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர். பின்னர் அவருடைய பணியின் காரணமாக ஆங்கரிங்கிற்கு பிரேக் எடுத்தார். மூன்று ஆண்டுகள் கழித்து மறுபடியும் தன் ஆங்கரிங் பயணத்தைத் தொடர விரும்பியவர் தனக்கான சரியான தளத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். இந்நிலையில், ஜோதிட பலன் சொல்வதற்காக அவருக்கென தனியே ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்திருக்கிறார். இது குறித்து அவரிடம் பேசினோம்.

விஷால்

`ஜோதிடபலன்' சொல்வதற்காகத் தனியா ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்திருக்கேன். ஜோதிடர் ஒருவர் தருகிற ஸ்கிரிப்ட்டை வைத்து இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறேன். ஒரு சின்ன டீம் வைச்சு அது மூலமா இதை சாத்தியப்படுத்திருக்கேன். நிறைய செலிபிரிட்டி நண்பர்கள் உங்களை மீண்டும் பார்க்கிறதில் ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு வாழ்த்துகள் தெரிவிச்சிருக்காங்க. 'RasiPalan By Vishal'ன்னு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன். இனிமேல், அந்த யூடியூப் சேனலில் தினசரி ராசிபலன்களைச் சொல்லப் போறேன். மிஸ் பண்ணாம பாருங்க. ஐ அம் பேக்! என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க