``வீட்டைக் காலி பண்ணி, சாவியைக் கொடுக்கிறப்போ அழுதுட்டேன்!” - `ப்ரியமானவள்' ப்ரவீணா | Priyamanaval serial actress praveena says, emotional memories and finished serial feelings

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (13/05/2019)

கடைசி தொடர்பு:13:20 (13/05/2019)

``வீட்டைக் காலி பண்ணி, சாவியைக் கொடுக்கிறப்போ அழுதுட்டேன்!” - `ப்ரியமானவள்' ப்ரவீணா

ன் டிவி `ப்ரியமானவள்' சீரியல் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்நிலையில், மகிழ்ச்சியும் கவலையும் சேர்ந்த உணர்வில் இருக்கிறார், சீரியலின் நாயகி ப்ரவீணா.

ப்ரவீணா

இதுகுறித்து அவரிடம் பேசினோம்.``என் கரியரில் மிக முக்கியமான சீரியல் இது. கடந்த ஐந்து வருஷத்தில் தமிழ் மக்கள் எனக்குக் கொடுத்த அன்புக்கு ஈடு இணையே கிடையாது. சீரியல் முடியிறதுக்கு சில தினங்களுக்கு முன்பிருந்தே நான் யார்கிட்டயும் சரியா பேசலை. கடைசிநாள் ஷூட்டிங்ல என்னுடைய போர்ஷன் முடிஞ்சதும், நான் யார்கிட்டயும் சொல்லாம உடனடியா கிளம்பிட்டேன். ஒருவேளை அங்க இருந்திருந்தால், நான் ரொம்பவே அழுதிருப்பேன். அதனால மத்தவங்க வேலையும் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த சீரியல் டீம்ல எல்லோரும் குடும்பத்தினர்போலத்தான் நட்புடன் இருந்தோம். ஆனால், சீரியல் முடிஞ்சதில் நிறைய பேருக்கு சென்டிமென்ட் ரீதியா கவலையிருக்கு.

ப்ரவீணா

ஐந்து வருஷத்துக்கு முன்பு, தொடர்ந்து நடிப்பது குறித்து தயக்கத்தில் இருந்தேன். அப்போ வந்த நிறைய வாய்ப்புகளில், `ப்ரியமானவள்' வாய்ப்பைத் தேர்வுசெய்யச் சொல்லி என் உள்மனசு சொல்லுச்சு. அதுக்கான அர்த்தம் இப்போதான் புரியுது. உமாங்கிற கேரக்டரின் தாக்கத்திலிருந்து நான் வெளியில்வர கொஞ்சம் காலமாகும். அதுபோல ஒரு கேரக்டர் இனி கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். கடந்த ஐந்து வருஷம் சென்னையில் தங்கியிருந்த வீட்டைக் காலி செய்து, சாவியை ஒப்படைக்கிறப்போ அழுதுட்டேன். கேரளாவிலுள்ள என் வீட்டுக்கு வந்த பிறகும் கலங்கினேன். என் மனசு ரொம்பப் பாரமா இருக்கு. இப்போ கேரளாவிலிருந்தாலும், என் நினைவுகள் தமிழ்நாட்டில்தான் இருக்கு" என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் ப்ரவீணா