பிரெஞ்சு காலத்து கிளாசிக் நூலகம்.. புத்தகப் பிரியர்களுக்கு புதுவையில் ஒரு செம ஸ்பாட்#MyVikatan | romain rolland library in pondicherry has lakhs of books

வெளியிடப்பட்ட நேரம்: 14:08 (13/05/2019)

கடைசி தொடர்பு:14:08 (13/05/2019)

பிரெஞ்சு காலத்து கிளாசிக் நூலகம்.. புத்தகப் பிரியர்களுக்கு புதுவையில் ஒரு செம ஸ்பாட்#MyVikatan

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற ஒன்று இந்த ரோமன் ரோலண்ட்  நூலகம்.  பழைமை  வாய்ந்த  நூலகமான  இது  1827ம்  ஆண்டு  தொடங்கப்பட்டது. 

ரோமன் ரோலண்ட் நூலகம்

பொது நூலகம் என்ற  பெயரில்   தொடங்கப்பட்டாலும்  ஐரோப்பியர்களும்,  அரசிடம்சிறப்பு  அனுமதி  பெற்றிருந்த  செல்வந்தர்களும்  மட்டுமே  அனுமதிக்கப்பட்டனர்.  பின்னர்  பிரெஞ்ச்  மொழிகளைக்  கற்றுக்  கொள்ளவும்,  அதனைக்  கற்றுக்கொண்ட  பிரெஞ்ச்  பூர்வகுடிகள்  தங்களின்  மொழி   ஆற்றலை  மேலும்  வளர்த்துக்  கொள்வதற்காகவும்  அந்த தடை  நீக்கப்பட்டு  அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். 

நூலகம்

1850-ம் ஆண்டு இந்தநூலகத்தில் இடம்பெற்றிருந்த புத்தகங்களின் எண்ணிக்கை 6,500. கடந்த 2018-ம்  ஆண்டு  எடுத்த  கணக்கின்படி  தற்போது  3,80,794  புத்தகங்கள்  இருக்கின்றன.  இதுதவிரகுழந்தைகளுக்கு  வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த  வேண்டும்  என்ற  நோக்கத்தில்   இந்த  வளாகத்தின் ஒரு பகுதியில் ‘குழந்தைகள் பிரிவு’ இயங்கி வருகிறது. 4 முதல்  14 வயது  வரை  உள்ள  குழந்தைகள்  இந்த  நூலகத்தின் உறுப்பினராகலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க