மிருதுவான யம்மி பிரெஞ்ச் ஆம்லெட்! - புதுச்சேரி டைரீஸ் #MyVikatan | french omelet and romain rolland library is famous in pondicherry

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (13/05/2019)

கடைசி தொடர்பு:15:10 (13/05/2019)

மிருதுவான யம்மி பிரெஞ்ச் ஆம்லெட்! - புதுச்சேரி டைரீஸ் #MyVikatan

300 வருடங்கள் புதுச்சேரியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறி 65 ஆண்டுகள்  உருண்டோடிவிட்டன.  ஆனால் அவர்களின் மொழி, கலாசாரம் மற்றும் உணவு போன்றவை புதுச்சேரி மக்களின் வாழ்வியலில் கலந்திருக்கிறது.  அதில் ஒன்றுதான் `பிரெஞ்ச் ஆம்லெட்’. 

பிரெஞ்ச் ஆம்லெட்

முட்டையை உடைத்து அதன்வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் தனித்தனியே பிரித்துச் செய்யப்படுவதுதான் பிரெஞ்ச் ஆம்லெட். பிரித்தெடுக்கப்பட்ட மஞ்சள் கருவை நன்றாகக் கலக்கிதோசைக் கல்லில் வார்க்க வேண்டும். பின்னர் வெள்ளைக் கருவை நுரை வரும் வரை கலக்கி, ஏற்கெனவே ஊற்றப்பட்ட மஞ்சள் கருவின் மேல் வைக்க வேண்டும். பின்னர், அதன்மீது குடை மிளகாய், தக்காளி, உப்பு, மிளகுத்தூள் போன்றவற்றை வைத்து ஐஸ்க்ரீம் போல பரிமாறுவது பிரெஞ்ச் ஸ்டைல். காரம் இல்லாமலும், மிருதுவாகவும் இருக்கும் இந்த ’பிரெஞ்ச் ஆம்லெட்’ தனது சுவையினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க