``ரொம்ப கலாய்க்கிறாங்க!” - ஊர் பேரை மாற்றச் சொல்லி கதறும் கோவை கிராமம் #MyVikatan | This Coimbatore village wants to change their village name

வெளியிடப்பட்ட நேரம்: 07:05 (14/05/2019)

கடைசி தொடர்பு:07:11 (14/05/2019)

``ரொம்ப கலாய்க்கிறாங்க!” - ஊர் பேரை மாற்றச் சொல்லி கதறும் கோவை கிராமம் #MyVikatan

நீங்க, சிவகார்த்திகேயன் நடிச்ச `எதிர்நீச்சல்' படம் பாத்துருக்கீங்களா?  தன்னோட பெயரால ஒரு மனுஷன் சந்திக்கிற அவமானங்களை காமெடி கலந்து காட்டியிருப்பார்கள். அது ஏதோ சினிமாவுக்காக சித்திரிக்கப்பட்ட காட்சிகள் கிடையாதுங்க, முன்னோர்கள் பெயரை வைக்கிறேன்; மூத்தோர்கள் பெயரை வைக்கிறேன்’னு பெத்தவங்க பண்ற அட்டூழியத்தால் இந்த நக்கல் புடிச்ச பூமியில் பல ‘பேர் ’ பதுங்கிப் பதுங்கி  வாழ வேண்டியிருக்கிறது.  அப்படி, கோவையில் ஒரு கிராமமே தங்கள்  ஊர்ப் பெயரினால் ஏற்படும்  அவமானத்தால் பல வருஷமா அல்லாடுகிறது; தங்கள் ஊர் பெயரை மாற்றச் சொல்லி போராடுகிறது.

பன்னிமடை  

கோவையிலிருந்து 12 கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது பன்னிமடை.  அந்த கிராமத்துக்கு இந்தப் பெயர் வந்ததற்கான  அதிகாரபூர்வமான காரணங்கள் எதுவும் தெரியலை.  அதனால்,  அந்தக்  கிராமத்து  மக்களே  பெயர்க்  காரணம் தேடி ஆராய்ச்சியில் குதிச்சிட்டாங்க. ஊரிலுள்ள பெரியவர்களையெல்லாம் ஊரின் பெயர் காரணம் கேட்டு டார்ச்சர் செய்ததில், `அந்தக் காலத்தில் பொன்னூத்து’ங்கிற ஓடையிலிருந்து இந்த ஊருக்கு வந்த  தண்ணீர்  ‘பன்னீர் ’ மாதிரி இருக்குமாம்.  அதனால, இந்த ஊருக்கு பன்னீர்மடை’ன்னு பெயர் வந்துச்சு’ன்னும் காலப்போக்கில் அது பன்னிமடைன்னு மாறிடுச்சு’ன்னும்” விவரம் தெரிந்த பெருசுகள் சொல்ல,  அதைக் கேட்ட  இளவட்டங்கள்  வெடித்துக் கிளம்பினார்கள்.  ஊரில் உள்ள கடைகளிலிருந்த போர்டுகளில் பன்னிமடை என்பதை அழித்துவிட்டு  `பன்னீர் மடை’ என்று பெயரை மாற்றி எழுதினார்கள். `பன்னீர் மடை’ என்று ஊருக்குத் தனியாக பெயர் பலகை வைத்தார்கள். ஆனால், அவர்களால் பேருந்துகளிலோ அரசு அலுவலங்கங்களிலோ பெயரை மாற்ற முடியவில்லை. கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிப் பார்த்தார்கள்,  கலெக்டரிடம் மனுகொடுத்துப் பார்த்தார்கள், அமைச்சரிடம் கோரிக்கைவைத்துப் பார்த்தார்கள்.. ம்ஹூம்!  பல ஆண்டுகள் ஆகியும் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவே இல்லை. 

பன்னிமடை

ஏன் இவ்வளவு போராட்டம் என்று விசாரித்தால்? நெடுநெடுவென்று வளர்ந்திருப்பவர்களும் கண்ணைக் கசக்கிறார்கள்.  ``பள்ளிக்கூடத்திலிருந்தே இந்த ஊர் பேரு எங்களை அவமானப்படுத்த ஆரம்பிச்சுருது. ஏதாவது ஒரு பிரச்னையில எங்களைச் சமாளிக்க முடியலை’ன்னா போடா... `பன்னிமடை’ன்னு  சொல்லி கலாய்ப்பாங்க.  வேலைக்குப் போற இடம், கல்யாணத்துக்குப் பெண் கேட்டுப் போற இடம் எல்லா பக்கமும், ஊர் பெயரைக் கேட்டதும் புஹாஹாஹா’ன்னு சிரிக்கிறாங்க.’ என்று வேதனையோடு சொல்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க