யாசகம் வேண்டாமே! - மறுவாழ்வு கொடுக்கும் `அட்சயம்' இளைஞர் #MyVikatan | Inspiring younsgter who starts atchayam trust from kumarapalayam

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (14/05/2019)

கடைசி தொடர்பு:07:50 (14/05/2019)

யாசகம் வேண்டாமே! - மறுவாழ்வு கொடுக்கும் `அட்சயம்' இளைஞர் #MyVikatan

குமாரபாளையத்தில் ஆரம்பித்த 'அட்சயம்' என்ற  அறக்கட்டளை மூலம் 6 வருடங்களாக யாசகர்கள் அற்ற உலகத்தை உருவாக்க வேண்டும் என்று இதுநாள் வரை 2800-க்கும் மேற்பட்ட யாசகர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, அதில் 350 பேரை மாற்றி, மறுவாழ்க்கை வழங்கியுள்ளார் நவீன்குமார்.

நவீன்குமார்

2014ல்  'அட்சயம்' என்ற அமைப்பைத் தன்னுடன் படித்த சக மாணவர்களைக்கொண்டு தொடங்கினார்  நவீன்குமார். குமாரபாளையம், பவானி, ஈரோடு, சேலம்  ஆகிய  பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாண்டு, பார்க், இதர பகுதிகளில் பிச்சை எடுப்பவர்களிடம் (யாசகர்களை), எடுக்க வேண்டாம் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிலிருந்து அவர்களை மீட்டு, அவர்களின் குடும்பத்துடனோ அல்லது ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்திலோ சேர்த்துவிடுகின்றனர்.

இவரது சேவையைப் பாராட்டி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், சிறந்த சமூக சேவைக்கான விருதையும், விகடன் டாப்  10 இளைஞர்கள்- 2018 விருதையும் பெற்றுள்ளார். ‘பிச்சை எடுப்பதைவிட, பிச்சை கொடுப்பதே தவறு’ என்றும், கையேந்தும் யாசகர்களுக்கு உணவு, உடையை வழங்கி உதவுமாறு மக்களிடம் தொடர்ந்து  விழிப்புணர்வு செய்துவருகின்றனர், அட்சயம் அமைப்பினர்.. யாசகர்கள்  இல்லாத தமிழகம், இந்தியாவை உருவாக்க கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும்  அவரோடு பல தன்னார்வலர்கள் பணிபுரிந்துவருகிறார்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க