ஆஹா இதுவல்லவா காதல்.. மனைவிக்குச் சிலை வைத்து வழிபடும் புதுக்கோட்டை `ஷாஜகான்’#MyVikatan | pudukottai man built temple for his wife

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (14/05/2019)

கடைசி தொடர்பு:20:05 (16/05/2019)

ஆஹா இதுவல்லவா காதல்.. மனைவிக்குச் சிலை வைத்து வழிபடும் புதுக்கோட்டை `ஷாஜகான்’#MyVikatan

இன்றைய இளைஞர்கள் பலரும் குறுகிய காலத்துக்குள்ளே காதலித்து திருமணம் செய்துகொண்டு, கணவன்-மனைவியாக மாறிய குறுகிய காலத்துக்குள்ளே விவாகரத்து வாங்கிப் பிரிந்து செல்கின்றனர். இவர்களுக்கெல்லாம், பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசானாகத் திகழ்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுப்பையா.

சுப்பையா

புதுக்கோட்டை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா. தன் மாமன் மகளான செண்பகவள்ளியை சிறு வயதில் இருந்தே காதலித்து, 1958-ல் திருமணம் செய்துகொள்கிறார். இந்தத் தம்பதிக்கு 8 பிள்ளைகள். தனது காதல் மனைவி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே உடல்நிலை சரியில்லாமல் இறக்க நேரிடவே, சுப்பையாவைத் தனிமை வாட்டியுள்ளது. மனைவியின் நினைவுகள் அவ்வப்போது வந்தாலும், மனைவியைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்குள் இருந்துள்ளது.

சுப்பையா

காதல் மனைவிக்குச் சிலை வைக்க முடிவு செய்த சுப்பையா, வீட்டின் முன்புறம் 3 அடியில் ஐம்பொன்னில் ஆன மனைவியின் சிலையை தத்ரூபமாக அமைத்துள்ளார். தினமும் அதிகாலையில் மனைவியின் சிலைக்கு படையல் போட்டு பூஜைகள் செய்கிறார். மறந்தும் மனைவிக்குப் பூஜை செய்யத் தவறுவதில்லை.

சுப்பையா
 

 

 

மனைவியின் ஒவ்வொரு நினைவுநாளின் போதும் ஆதரவற்றோர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கி வருகிறார். ஒவ்வொரு வருடமும் வரும் காதலர் தினம் சுப்பையாவுக்கு ரொம்பவே ஸ்பெஷல். மனைவிக்குப் பிடித்த பொருள்களை எல்லாம் வாங்கி வந்து மனைவி சிலைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார். நமக்கு அது சிலையாகத் தெரிந்தாலும், சுப்பையா கண்களுக்கு தன் காதல் மனைவி செண்பகவள்ளியாகவே தெரிகிறார்.