முனியாண்டி கோயிலில் தொல்லியல் துறையினர் அகழாய்வு! - என்ன காரணம்? | archaelogy department officer inspection near srivilliputtur

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (14/05/2019)

கடைசி தொடர்பு:11:15 (14/05/2019)

முனியாண்டி கோயிலில் தொல்லியல் துறையினர் அகழாய்வு! - என்ன காரணம்?

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் மற்றும் மம்சாபுரம் அருகே உள்ள குறவன்கோட்டை கண்மாயில் உள்ள முனியாண்டி கோயிலில், தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தினர்.

முனியாண்டி கோயிலில் தொல்லியல் துறையினர் அகழாய்வு

விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் பகுதியில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டப்படுவதற்காக பூமி பூஜை செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்தப் பகுதியில் ஆய்வுசெய்த தொல்லியல் ஆர்வலர்கள், அங்கே கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆய்வு நடத்த வலியுறுத்தியும் வருகின்றனர். இதுதொடர்பாக தமுஎகச, நாம் தமிழர் கட்சி எனப் பல்வேறு அமைப்பினர், விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதேபோல, குறவன்கோட்டை கண்மாய்ப் பகுதியிலும் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் உள்ளன.

தொல்லியல் துறையினர் அகழாய்வு

இந்நிலையில், தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் உத்தரவின் பேரில், கிருஷ்ணன் கோயில் அருகே உள்ள காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சி இடத்திற்கு அருகிலும், மம்சாபுரம் அருகே உள்ள குறவன்கோட்டை கண்மாயில் உள்ள முனியாண்டி கோயில் அருகிலும் தொல்லியல் துறை மதுரை மண்டல உதவி இயக்குநர் (பொ) சக்திவேல் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.