இதுதான் தமிழ்நாட்டின் மவுத் ஆர்கன் ஸ்பெஷலிஸ்ட் லட்சுமி! #MyVikatan | Tamil Nadu Elephant Lakshmi Who is a Mouth Organ Specialist

வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (14/05/2019)

கடைசி தொடர்பு:11:54 (14/05/2019)

இதுதான் தமிழ்நாட்டின் மவுத் ஆர்கன் ஸ்பெஷலிஸ்ட் லட்சுமி! #MyVikatan

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சுற்றி வரிசையாக உள்ளன, நவதிருப்பதிகள் எனப்படும் ஒன்பது பெருமாள் கோயில்கள். ஒவ்வொறு கோயிலும் ஒவ்வொரு கிரகத்துக்கு உகந்தவையாகச் சொல்லப்படுகிறது. இதில் ஒன்றுதான் இரட்டைத் திருப்பதி, அரவிந்தலோச்சனார் பெருமாள் கோயில். இக்கோயிலில், லெட்சுமி என்ற பெண் யானை உள்ளது.

லெட்சுமி யானை

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்வது மட்டுமில்லாமல், மவுத் ஆர்கன் வாசித்துக்காட்டுவதும்தான் இந்த லெட்சுமியின் சிறப்பு. பாடல்களுக்கு ஏற்றபடி தலையையும் ஆட்டுவதால், ஊர் முழுக்க லட்சுமிக்கு சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் ஏராளம். 10 முதல் 15 நிமிடங்கள் வரை தொடர்ந்து மவுத் ஆர்கன் வாசிப்பாளாம் லெட்சுமி. டிரம்ஸ் அடிக்க கற்றுக்கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், யானையின் பாகன் பாலன். யானைகள் புத்துணர்வு முகாமில் மவுத் ஆர்கன் வாசிக்கும் இரட்டைத்திருப்பதி கோயில் லெட்சுமிக்கும், கம்பு சுற்றும் திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ராமர் கோயிலில் உள்ள  யானை லெட்சுமிக்கும் போட்டி கடுமையாக இருக்குமாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க