``பக்காவா பிளான் பண்ணேன்... ஆனாலும் பல்பு வாங்கினேன்!" - சர்ப்ரைஸ் குறித்து அஜந்தா வெங்கட் | serial actor venkat share his surprising moment

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (14/05/2019)

கடைசி தொடர்பு:14:40 (14/05/2019)

``பக்காவா பிளான் பண்ணேன்... ஆனாலும் பல்பு வாங்கினேன்!" - சர்ப்ரைஸ் குறித்து அஜந்தா வெங்கட்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிப்பவர், வெங்கட். நடிகராக மட்டுமின்றி சன் மியூசிக்கில் விஜே-வாகவும் இருந்திருக்கிறார். கடந்த வாரம், வெங்கட்டின் பிறந்தநாளுக்கு அவருடைய மனைவி அஜந்தா சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். என்ன சர்ப்ரைஸ் கொடுத்தாங்கன்னு வெங்கட்டிடம் கேட்டோம்.

வெங்கட்

``என் பிறந்தநாள் அன்னைக்கு எனக்கு ஷூட்டிங் இருந்துச்சு. நான் செட்டுல இருந்தேன். அங்கே, காலையில் இருந்தே என்கூட நடிக்கிற ஆர்ட்டிஸ்ட்டுக்கு உடம்பு சரியில்லைனு சொன்னாங்க. ஷாட் முடிஞ்சு ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன். அப்போ, திடீர்னு ஒருத்தர் ஓடிவந்து அந்த ஆர்டிஸ்ட் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கன்னு சொன்னார். பதறிப்போய் ஓடிவந்து பார்த்தால், எல்லோரும் கேமராவோட ரெடியா இருந்தாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை.

பிறந்தநாள் பரிசு

திடீர்னு என் மனைவி அஜந்தாவும், என் பொண்ணு தேஜுவும் அங்கே ஒரு ரூமுக்குள்ளே இருந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டே வெளியில் வந்தாங்க. நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. பயங்கர சர்ப்ரைஸா இருந்துச்சு. அதுமட்டுமில்லாம, அஜந்தாவுடைய உழைப்பில் வந்த பணத்துல எனக்கு ஐ போன் வாங்கிக் கொடுத்தாங்க. நிறைவான, மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமைந்தது எனத் தன் மனைவி அஜந்தாவின் கரம்பற்ற அஜந்தா தொடர்ந்தார்.

பிறந்தநாள் பரிசு

``எல்லாமே பக்காவாகத்தான் பிளான் பண்ணேன். அப்படியிருந்தும் அவர்கிட்ட ஒரு பல்ப் வாங்கிட்டேன். அது என்னன்னா, நாங்க ஒரு ரூமுக்குள்ளே இருந்து வந்தோம்னு சொன்னாருல, அந்த ரூம் செட் பாத்ரூமாம். எனக்கு எப்படிங்க அது தெரியும்? கேக் வெட்டி எல்லா சர்ப்ரைஸும் முடிஞ்சதும், அதெல்லாம் சரி, சர்ப்ரைஸ் பண்றதுக்கு ஏன் பாத்ரூமுக்குள்ளே மறைஞ்சு இருந்தேனு கேட்டாரு. அப்புறம் தான் நான் நின்னுட்டிருந்தது பாத்ரூம்னே எனக்குத் தெரியும்'' என சிரித்துக்கொண்டே வெங்கட்டின் தோள் சாய்ந்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க