`தப்பு செய்றது அவங்க; ஆனா, பலியாடு நான்தான்!' - நடிகை நிரோஷா ஷேரிங்ஸ் | amma always scolds me because of my brother sister's mistakes says actor nirosha

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (14/05/2019)

கடைசி தொடர்பு:15:40 (14/05/2019)

`தப்பு செய்றது அவங்க; ஆனா, பலியாடு நான்தான்!' - நடிகை நிரோஷா ஷேரிங்ஸ்

நிரோஷா

டிகை ராதிகாவின் தங்கையும் பிரபல நடிகையுமான நிரோஷா, தன் வாழ்க்கைப் பயணம் குறித்து சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறார்.

``என் அண்ணன் மோகன், அவருக்கும் எனக்கும் வயித்துவலினு ஸ்கூல்ல பொய் சொல்லி, புரூஸ்லி படத்துக்குக் கூட்டிட்டுப்போனார். படத்தை இருமுறை பார்த்துட்டு வீட்டுக்கு வந்தோம். நாங்க பொய்சொல்லி சினிமா பார்த்ததை, என் அக்கா ராதிகா கண்டுபிடிச்சுட்டாங்க. அண்ணனுங்களோ... அக்காவோ... யார் தப்பு செய்தாலும் பலியாடு என்னவோ நான்தான். அதனாலேயே அம்மாகிட்ட அடிக்கடித் திட்டுவாங்குவேன். 

நிரோஷா

நானும் நடிக்க வந்து ஓரளவுக்குப் புகழ்பெற்றேன். நான் ஹீரோயினா நடிச்ச காலத்தில், சத்யராஜ் சார், மோகன் சார், ராமராஜன் சார் ஆகியோர்கூடதான் ஜோடியா நடிக்கலை. என் சினிமா கரியரில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டிருக்கு. எதுக்குமே நான் பெரிசா கவலைப்படலை. அதுக்குக் காரணம் என் காதல் கணவர், ராம்கிதான். நாங்க இருவரும் போராடித்தான், கல்யாணம் செய்துகிட்டோம். அது ரொம்பவே சுவாரஸ்யமானது. இப்போவரை நான் நடிச்சுகிட்டிருந்தாலும், சினிமா துறையில் எனக்குப் பெரிசா எந்த ஆசையுமில்லை. ஆனா, என் கணவருக்கு அதிக புகழ் கிடைக்கணும்னு ஆசைப்படறேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் நிரோஷா.

நடிப்பு, காதல், திருமணத்துக்கு எதிர்ப்பு, குடும்ப வாழ்க்கை உட்பட தன் சினிமா மற்றும் வாழ்க்கைப் பயணம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார் நிரோஷா. இன்று வெளியாகியுள்ள அவள் விகடன் `எவர்கிரீன் நாயகிகள்' தொடரில்.