`அலையாத்திக் காடுகளின் ஊடே நீண்ட நேரம் படகு சவாரி செய்யணுமா?' பிச்சாவரம் வாங்க #MyVikatan | Pichavaram mangrove forest is best tourist spot

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (14/05/2019)

கடைசி தொடர்பு:18:01 (14/05/2019)

`அலையாத்திக் காடுகளின் ஊடே நீண்ட நேரம் படகு சவாரி செய்யணுமா?' பிச்சாவரம் வாங்க #MyVikatan

படகு குழாம்

கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சதுப்பு நில காடுகளுக்கு இடையே ஜாலியா படகு  சவாரி செய்வதை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். 

பிச்சாவரம்

பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உள்ள செடிகளும் குறு மரங்களும், கடல் நீருக்கு உள்ளே வளரும் தன்மை உடையதாக உள்ளது. பிச்சாவரத்தில்  சிறு, சிறு தீவுக்கூடங்கள், படகு குழாம், 6 கிலோ மீட்டர் நீளமுள்ள எழில் மிகக் கடற்கரை மற்றும் பறந்து விரிந்த அடர்த்தியான மாங்குரோவ் மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளைக் கொண்ட அலையாத்திக் காடுகளின் ஊடே நீண்ட நேரம் படகு பயணம் மேற்கொள்வது மனதைவிட்டு நீங்கா நினைவுகளை அளிக்கும்.  

பிச்சாவரம்

இந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் கால்வாய்களைப் படகுகள் மூலம் சென்று பார்க்க வனத்துறையினர் மற்றும் சுற்றுலாத் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். தற்பொழுது சுற்றுலாப் பயணிகள் வெயிலிலிருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களுக்குச் சென்று வருகின்றனர். ஆனால், அங்கு நடுத்தர மக்கள் சென்று வர முடியாது.

கடலூர் பிச்சாவரம்
 

இவற்றிற்கான செலவு அதிகம் என்பதால் நடுத்தர மக்கள் அங்கு செல்வதில்லை. இருப்பினும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு  ஊட்டியாகவும்  கொடைக்கானலாகவும் இந்தப் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. கடல் நீரில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் படகு சவாரி செய்யும்போது வெயில் தாக்கம் அதிகமாகத் தெரிவதில்லை. இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொது மக்களும் கண்டு ரசித்து வருகின்றனர்.