`ஆதியன் பயங்கர அட்ராசிட்டி; ஜேடன் சமத்துக்குட்டி!' - நெகிழும் பரத் - ஜெஸ்லி தம்பதி | actor bharath and Jeshly speaks about their new born childs

வெளியிடப்பட்ட நேரம்: 18:56 (14/05/2019)

கடைசி தொடர்பு:18:56 (14/05/2019)

`ஆதியன் பயங்கர அட்ராசிட்டி; ஜேடன் சமத்துக்குட்டி!' - நெகிழும் பரத் - ஜெஸ்லி தம்பதி

`ஆதியன் பயங்கர அட்ராசிட்டி; ஜேடன் சமத்துக்குட்டி!' - நெகிழும் பரத் - ஜெஸ்லி தம்பதி

டிகர் பரத் - டாக்டர் ஜெஸ்லி தம்பதிக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறந்து எட்டு மாதமாகிறது. இந்நிலையில் குழந்தைகளுடன் ஃபேமிலி பேட்டிக்காக, பரத் வீட்டுக்குச் சென்றிருந்தோம். இரட்டைக் குழந்தைகளான ஆதியன் மற்றும் ஜேடன் இருவரும் உற்சாகமாக தங்கள் விளையாட்டு அறையில் விளையாடிக்கொண்டிருந்தனர். பரத் மற்றும் ஜெஸ்லி, குழந்தைகளுடன் விளையாட்டில் ஐக்கியமாக, அந்த இடத்தில் உற்சாகம் அன்லிமிட்டடானது. போட்டோஷூட் மற்றும் தம்பதியின் பேட்டிக்கிடையே, அழுகை, தூக்கம், சிரிப்பு, விளையாட்டு எனக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலுமே க்யூட்தான்.

பரத்

``எனக்குப் பெண் குழந்தைனா ரொம்பப் பிரியம். பெண் குழந்தைதான் பிறக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா, டபுள் ட்ரீட் மாதிரி, ஆதியனும் ஜேடனும் எங்களுக்குப் பொக்கிஷமா கிடைச்சாங்க. ட்வின்ஸ்னாலும், இருவரின் முகச் சாயலிலும் நிறைய வித்தியாசம் இருக்கு. பசங்க பிறந்த பிறகு அவங்களும் நானும் பட்டு வேஷ்டி, சட்டையுடன் கெத்தா போட்டோ எடுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். பல மாதங்களுக்குப் பிறகு, என் ஆசை நிறைவேறினப்போ எனக்கு அளவில்லா சந்தோஷம்.

பரத்

பசங்க தினமும் ரொம்பவே ஆக்டிவா விளையாடுறாங்க. அவங்கக்கூட நானும், ஜெஸ்லியும் நிச்சயமா விளையாடணும். பசங்க தூங்கறதுக்கு நேரங்காலமெல்லாம் இல்லை. அதனால, எங்க இருவரின் தூகக நேரமும் மாறிடுச்சு. ஒருத்தர் முழிச்சுக்கிட்டால், இன்னொருத்தரின் தூக்கம் பாதிக்கும்னு இரவுல மட்டும் பசங்க ரெண்டு பேரையும் தனித்தனி ரூம்ல தூங்கவெச்சுடுவோம். குழந்தைங்க அடம்பிடிக்காம, மத்தவங்ககிட்ட நல்லா பழகுறாங்க. குழந்தைகளைக் கவனிச்சுக்கவே, டென்டல் டாக்டரான ஜெஸ்லி கிளீனிக் போறதைத் தற்காலிகமாக நிறுத்திக்கிட்டாங்க." - தன் பார்வையை மனைவி மீது உற்சாகமாகத் திருப்புகிறார், பரத்.

பரத்

``முன்பெல்லாம், ஷூட்டிங் இல்லைன்னா பரத் அடிக்கடி ஜிம் போயிடுவார். தவிர, பேட்மிட்டன், ஃபுட் பால், ஷட்டில்காக், டென்னிஸ், கிரிக்கெட்னு ஒரு விளையாட்டையும் மிச்சம் வைக்க மாட்டார். பர்சனலா பாடி பில்டிங் போட்டோஷூட் பண்றதுக்காக, இப்போ ஜிம்முக்குப் போகும் நேரத்தை அதிகமாக்கியுள்ளார். அதனால பரத்திடம் செல்லமா கோபப்பட்டேன். அதனால இப்போ குழந்தைங்களுக்காகச் சரியா நேரத்தை ஒதுக்கிடுறார்.

குழந்தைகளுடன் ஜெஸ்லி

பரத், கடைக்குப்போய் டயப்பர் வாங்கிட்டு வருவார். ஆனா, அதை ‘குழந்தைகளுக்கு மாட்டிவிடத் தெரியாது; பண்ணமாட்டேன்’னு ஒருமுறை சொன்னார். நான் வலியுறுத்தி இவரைக் குழந்தைகளுக்கு டயப்பர் மாட்டிவிட வெச்சு, அதை வீடியோ எடுத்து வெச்சிருக்கேன்" என்கிற ஜெஸ்லியுடன் சேர்ந்து பரத்தும் சிரிக்க, அதைப் பார்த்து குழந்தைகளின் முகமும் புன்னகையில் மலர்கிறது.

ஜெஸ்லி

``ஆதியன் பயங்கர அட்ராசிட்டி. எந்த ஒரு விஷயத்தையும் கூர்ந்து கவனிக்கிற ஜேடன், சமத்துக்குட்டி. ஆனா, ரெண்டு குழந்தைகளையும் எந்தப் பாகுபாடும் இல்லாம வளர்க்கும் பொறுப்புள்ள பெற்றோர் நாங்க. முன்பு எங்களுக்குள் இருந்த பப்ளி ரொமான்ஸ் இப்போ, மெச்சூரிட்டி ரொமான்ஸா மாறியிருக்கு. அன்பான இல்லற வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வில் இருக்கிறோம்.

ஆதியன் - ஜேடன்

குழந்தைகளை அவங்க விருப்பமான துறையில நல்ல நிலைக்குக் கொண்டுவர, எங்க கடமையைச் சிறப்பா செய்வோம். இப்போ பிரபலங்கள் பலரும் எங்க வீட்டுக்கு வந்து குழந்தைகளைப் பார்த்துட்டுப் போறாங்க. தவிர பசங்க வருகைக்குப் பிறகு, எங்க வீடு தினமும் கலகலப்பாக இருக்கு" என்கிற பரத் மற்றும் ஜெஸ்லி இருவரும் தங்கள் மடியில் ஆளுக்கொரு குழந்தையை வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். விவரம் புரியாவிட்டாலும், ஆதியனும் ஜேடனும் அந்தச் சூழலுக்கு இனிமை சேர்த்து லைக்ஸ் அள்ளினர்.

குழந்தைகளுடனான பரத் - ஜெஸ்லியின் வீடியோ பேட்டியைக் காண, கீழ்க்காணும் வீடியோவைக் க்ளிக் செய்யவும்:

 

 

 

ஆனந்த விகடனில் வெளியான பரத் - ஜெஸ்லி தம்பதியின் பேட்டியைப் படிக்க : “ரெண்டு பேரும் புரபோஸ் பண்ணலை!” இந்த டைட்டிலை க்ளிக் செய்யவும்.