`கோவையில் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு' - இரண்டு நாள்கள் நடக்கிறது | Fundamental Analysis Class at coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (14/05/2019)

கடைசி தொடர்பு:19:02 (14/05/2019)

`கோவையில் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு' - இரண்டு நாள்கள் நடக்கிறது

நாணயம் விகடன் நடத்தும் இந்த இரண்டு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு, 2019, ஜூன் 08 மற்றும் 09 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புக்கான கட்டணம் 6,000 ரூபாய். இந்த பயிற்சி வகுப்பை, எக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையத்தின் முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் நடத்தவிருக்கிறார்.

வரையறுக்கப்பட்ட வருமான அளவையும் தாண்டி அதிக வருமானம் ஈட்டுவதற்கு பங்குச்சந்தையே சரியான தேர்வாக இருக்கிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன்மூலம் நம் நாட்டின் தொழில் வளர்ச்சியிலும் பங்கெடுக்க முடிகிறது. ஆனால், பங்குச்சந்தையில் எப்படி லாபகரமாக முதலீடு செய்வது என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

பயிற்சி வகுப்பு

பங்குச்சந்தை முதலீட்டுக்கான சூட்சுமங்களைப் பயிற்றுவிக்கும் முயற்சியாக, நாணயம் விகடன் சார்பாக, 'பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு' தமிழகமெங்கும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கோவை, சென்னை, மதுரை, சேலம், திருச்சி போன்ற நகரங்களில் நடத்திவிட்டு தற்போது வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஒருமுறை கோவையில் நடத்தவிருக்கிறது. நாணயம் விகடன் நடத்தும் இந்த இரண்டு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு, 2019, ஜூன் 08 மற்றும் 09 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புக்கான கட்டணம் 6,000 ரூபாய். இந்தப் பயிற்சி வகுப்பை, எக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் நடத்தவிருக்கிறார்.

இந்த இரண்டு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பில், பங்குச்சந்தையில் வெற்றிகரமான முதலீட்டாளராக உருவெடுப்பது எப்படி, ஒரு பங்கின் விலை ஏன் ஏறுகிறது அல்லது இறங்குகிறது, வலிமையான பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி, ஒரு போர்ட்ஃபோலியோவை எப்படி உருவாக்குவது, இ.பி.எஸ், பிஇ ரேஷியோவை வைத்து எப்படி நிறுவனத்தைத் தேர்வுசெய்வது, ஒரு நிறுவனத்தின் லாப நஷ்டக் கணக்கை எப்படிப் படிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கும் விடை காணலாம். 

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், https://bit.ly/2PsOcoS என்ற இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, பணத்தைச் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும். பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு +91 99404 15222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.