`தி மேஜிக் வெயிட்லாஸ் பில்' - எடைக்குறைப்பு முறையை புத்தகமாக வெளியிட்ட அனுஷ்கா ஷெட்டி! | anushka shetty wrote the book about her weightloss

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (14/05/2019)

கடைசி தொடர்பு:21:20 (14/05/2019)

`தி மேஜிக் வெயிட்லாஸ் பில்' - எடைக்குறைப்பு முறையை புத்தகமாக வெளியிட்ட அனுஷ்கா ஷெட்டி!

தன்னுடைய க்யூட்டான முகபாவனைகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. விஜய், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தமிழில் வெளியாகிய 'இஞ்சி இடுப்பழகி' படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் 'பாகுபலி' படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்குத் திரும்ப முடியவில்லை. தற்போது பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தன்னுடைய உடல் எடையைக் குறைத்துள்ள அனுஷ்கா, அதற்காகத் தான் எடுத்த முயற்சிகளைத் தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து 'தி மேஜிக் வெயிட்லாஸ் பில் 'என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.

அனுஷ்கா

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கை முறை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனஅழுத்தம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் உறவு முறை, கரியர், தூக்கம், உணர்ச்சிகள் தொடர்பான எல்லாவகையான பிரச்னைகளுக்கும் வேறு எந்தச் சிகிச்சை முறையும் இன்றி வாழ்க்கை முறையைச் சரியாக அமைத்துக்கொண்டாலே போதுமானது. நமக்கு இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வுகளும் இருக்கின்றன. நமக்கான தீர்வை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். அது தொடர்பான தகவல்களை இந்தப் புத்தகம் உங்களுக்கு வழங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தகத்துக்கு ஷில்பா ஷெட்டி முன்னுரை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.