நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த நெல்லைப் பார்வையற்றோருக்கான பள்ளி! - ஒரு குட்டி வரலாறு#MyVikatan | tirunelveli special schools for islam girls and physically challenged

வெளியிடப்பட்ட நேரம்: 21:42 (14/05/2019)

கடைசி தொடர்பு:21:42 (14/05/2019)

நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த நெல்லைப் பார்வையற்றோருக்கான பள்ளி! - ஒரு குட்டி வரலாறு#MyVikatan

மதப்பணிகளுக்காக 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெல்லைக்கு வந்த ரெயினீஸ் ஐயர், அப்பகுதி மக்களுக்காகப் பாடுபட்டார். ஒரு மாணவனின் கல்வி, அவனுடைய சந்ததியைப் பாதுகாக்கும் என்பதை வலியுறுத்தினார். அதனால் 18 வருடங்களில் 105 கல்வி நிலையங்களைத் தொடங்கினார். 

பெண்களுக்குக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட காலகட்டத்தில், பாளையங்கோட்டையில் இஸ்லாமியப் பெண் குழந்தைகள் படிப்பதற்காக தனியாகக் கல்வி நிலையம் தொடங்கப்பட்டது. அந்தப் பள்ளியில் இஸ்லாமியக் குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டு கல்வி அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஆண், பெண் என இருபாலரும் படிக்கும் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது.

பார்வையற்றோர் பள்ளி   

பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ கல்வி நிறுவனங்களின் அலுவலகத்தில் ஆனிபேன் ஆக்ஸ்வித் என்ற பெண்மணி பணிகளைச் செய்துகொண்டிருக்கும்போது வெளியே பரட்டைத் தலையுடன் வந்த ஒரு சிறுவன் அழைத்துள்ளார். அந்தச் சிறுவன் பிச்சை எடுக்க வந்திருப்பதாக நினைத்து பதில் அளித்த ஆனிஜேன் ஆக்ஸ்வித்திடம், பார்வையற்ற தான் படிக்க வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனால் ஆனிஜேன் அவமானம் அடைந்துள்ளார்.

1888-ம் வருடம் கல்வி கற்க வந்த சுப்பு என்கிற அந்தப் பார்வையற்ற சிறுவனுக்குக் கற்பிப்பதற்காக இங்கிலாந்து சென்று ப்ரெய்ல் முறையிலான கல்வியைக் கற்றுத் திரும்பிய அவர், ஒரு பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். அதுவே பார்வையற்றோருக்கான நாட்டின் இரண்டாவது பள்ளியாகும். இப்போது அந்தப் பள்ளியில் ஐந்நூற்றுக்கும் அதிகமான பார்வையற்ற மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள்.