பச்சைமலை போங்க அப்படியே இயற்கையிடம் சரண்டர் ஆகிடுவீங்க! - திருச்சி சில்லிங் ஸ்பாட்#MyVikatan | Pachamalai turning into a popular tourism destination in Trichy

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (15/05/2019)

கடைசி தொடர்பு:12:30 (15/05/2019)

பச்சைமலை போங்க அப்படியே இயற்கையிடம் சரண்டர் ஆகிடுவீங்க! - திருச்சி சில்லிங் ஸ்பாட்#MyVikatan

‘பச்சமலைப் பூவு.. உச்சிமலைத் தேனு’ எனும் இளையராஜா பாடலை விடவும், ரசிக்க வேண்டிய பகுதி என்றால் அது பச்சைமலை. 

பச்சமலை

திருச்சியிலிருந்து 88 கி.மீ. தொலைவில் உள்ளது பச்சைமலை. மலை முழுக்க மரவள்ளிக் கிழங்கு, அன்னாசி, பப்பாளி, மூலிகை போன்ற பயிர்கள் விளைந்து கிடக்கின்றன. அதனாலோ என்னவோ திரும்பும் திசையெல்லாம் பசுமை. பார்க்கும்போதே பரவசம் ஊடுருவும். அப்படியே டிரக்கிங் போய் அங்குள்ள மங்கலம் அருவியில் குளிக்கலாம். அங்கு `ட்ரீ டாப்' என்ற இடத்தில் மரத்தின் மேல் தங்குவதற்கும், பார்வையிடுவதற்கு அரசு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் அவ்வளவாக உணவகங்கள் இல்லை என்றாலும், அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் முன்னமே ஆர்டர் செய்துவிட்டால் கிராமத்துச் சமையல் வாசனையுடன் உணவு கிடைக்கும்.  

பச்சமலை

இல்லையெனில் கட்டிச் சோறு கட்டிக்கொண்டு, பச்சைமலை போய் வந்தவர்களின் பயணம் எப்போதும் ஒரு த்ரில் அனுபவத்தோடு  இருக்கும். காட்டருவி, குறுகிய சாலை, நீண்டதூர நடைப்பயணம். தலையை தட்டிச் செல்லும் மேகம் என அத்தனையும் அனுபவித்தால் உணர முடியும்.

பச்சமலை

துறையூரை அடுத்த எரகுடி வழியாக பச்சைப் பெருமாள்பட்டி பக்கம் சென்றால் பசுமையாகக் காட்சியளிக்கும் புளியஞ்சோலை உள்ளது. கரடுமுரடான பாதையில் கொஞ்சம் தூரம் நடந்து சென்றால், புளியஞ்சோலை அழகை ரசிக்கலாம். காட்டுப் பாதை வழியே குட்டியாய் ஒரு குட்டி ட்ரெக்கிங்.

பச்சமலை

அங்கு விற்கப்படும் மீன், மாங்காய், அன்னாசிப் பழம், தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு அப்படியே நடந்தால் கொஞ்ச தூரத்தில் ஓடும் தண்ணீரில் குளித்துவிட்டு, ஜாலியாக பாறைகளில் விளையாடலாம். இயற்கையை ரசிக்க அந்தப் பகுதிக்கு ஒருமுறை ஜாலியாகப் போய்வரலாம்.