5 ரூபாய்க்கு சுடச் சுட மசாலா டீ; தாமரங்கோட்டை மக்களின் ஃபேவரைட் டீக்கடை #MyVikatan | This teashop owner selling tea for very low cost

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (15/05/2019)

கடைசி தொடர்பு:16:10 (15/05/2019)

5 ரூபாய்க்கு சுடச் சுட மசாலா டீ; தாமரங்கோட்டை மக்களின் ஃபேவரைட் டீக்கடை #MyVikatan

டீக்கடை

ஓர் அழகான கிராமம். அங்கு குறிப்பிட்ட டைமுக்கு வர மினி பஸ். அப்புறம் எங்கு பார்த்தாலும் பச்சை நிற வயல்வெளிகள், அங்குள்ள கடைகளில் நமக்கு வேண்டியதை ஓனரிடம் கேட்டு வாங்காமல் எடுத்துக்கொண்டு காசு வைத்துவிட்டுச் செல்லும் அன்பான மக்கள். அவர்களிடம் ஏமாற்ற நினைத்திடாத மனம். இப்படிப் பல விஷயத்தை திரைக்கதை வாயிலாக அருமையாக இயக்கி இருப்பார் ’நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தின் இயக்குநர்.

டீக்கடை

இந்தத் திரைப்படத்தில் வருவதைப் போலவே நெற்களஞ்சியத்தின் பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள தாமரங்கோட்டையில் மசாலா டீக்கடை ஒன்றை நடத்துகிறார் குப்புராஜ். அதாவது, இந்த மசாலா டீ யை போட்டு அதை ஹாட் டின்னில் வைத்து அதன் அருகே ஊண்டியல் ஒன்றையும் அவர் நடத்தும் உணவகம் முன்புறம் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். 

டீக்கடை

இந்த டீ கடைக்கு வருவோர் மசாலா டீ யைக் குடித்துவிட்டு காசை உண்டியலில் போட்டுவிட்டுச்செல்கிறார்கள். மேலும், வீட்டுக்குத் தேவையான டீ யை வாளிகொண்டுவந்தும்கூட நிரப்பிக்கொண்டு, பிறகு உண்டியலையும் நிரப்ப மறந்ததில்லை தாமரங்கோட்டை பகுதி மக்கள்.

டீக்கடை

 

இது குறித்து குப்புராஜிடம் கேட்டபோது, 'எங்கள் ஊரில் கஜா புயல் வீசியபோது மக்கள் டீ யை உணவாகவே பருகினார்கள். இந்த டீ யை ஒருவர் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சுமார் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்றார். இது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. முதலில் நான் சுத்தமான நீர் கொண்டு டீ போட்டு மிகக் குறைந்த விலைக்கே கொடுத்து வந்தேன். இப்போது கொஞ்சம் மாறுதலுக்காக மசாலா டீ போட்டு வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். ஆனால், நான் அருகில் இருந்து காசு வாங்க மாட்டேன். நான் டீ போட்டு வைத்துவிட்டு அதன் அருகே உண்டியல் வைத்துவிட்டுச் செல்வேன். சிலர் கரெக்டாகக் காசு போட்டுறுவாங்க. சிலர் போடாம போனாகூட கவல இல்ல இதை நான் சேவையாகக் கருதுறேன். தினந்தோறும் இந்தக் கடை செயல்படும் முக்கிய விடுமுறையைத் தவிர. நமது டீ குடிக்காமல் ஏர் உழவு தொழிலிருத்து பள்ளிக்கல்லூரிக்கு வேலலைக்குச்  செல்வதில்லை" என்று சிறு புன்னகையுடன் பதிலளிக்கிறார்.