டைனோசர் காலத்து `ஜிங்கோ பைலோபா’ மரம்.. நீலகிரியில் முளைத்தது எப்படித் தெரியுமா? #MyVikatan | Nilgiris has Ginkgo biloba tree that fed the dinosaurs

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (15/05/2019)

கடைசி தொடர்பு:19:30 (16/05/2019)

டைனோசர் காலத்து `ஜிங்கோ பைலோபா’ மரம்.. நீலகிரியில் முளைத்தது எப்படித் தெரியுமா? #MyVikatan

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நேபால் போன்ற நாடுகளிலிருந்து பல்வேறு வகையான மரங்களைக் கப்பல் மூலம் கொண்டுவந்து இங்கு அறிமுகம் செய்து நடவு செய்தனர்.


ஜிங்கோ பைலோபா மரம் 

அதில் மிக முக்கியமானதாக மிகவும் அரியவகை மரமாக இருப்பது. ஜிங்கோ பைலோப எனும் டைனோசர் காலத்து மரம். அரிதான டைனோசர் காலத்து மரம் என்றழைக்கப்படும் ஜிங்கோ பயலோபா 270 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மரமாகும். சீனாவில் நடந்த தொல்லியல் ஆய்வின்போது நிலத்துக்கு அடியில் படிமமாக இந்த வகை மரங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஜிங்கோ பைலோபா

ஜிங்கோ பேரினக் குடும்பத்தைச் சேர்ந்த ஜிங்கோ பைலோபா திசு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து சீனாவில் நடவு செய்து மீட்டுருவாக்கம் செய்தனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரு நாற்றுகளும், ஊட்டி மரவியல் பூங்காவில் ஒரு நாற்றும் நடவுசெய்யப்பட்டுள்ளது. மிகவும் மெதுவாக வளரக்கூடிய இந்த வகை மரம், சுமார் 3000 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. காஷ்மீர் அல்லது இமாலயப் பகுதிகளைத் தவிர இந்தியாவில் சுமார் 5 மரங்கள் மட்டுமே இந்த வகை மரங்கள் இருக்கக்கூடும். இங்கிலாந்தில் உள்ள ராயல் கிங் தாவரவியல் பூங்காவில் இந்த வகை மரம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஊட்டிக்கு வரவழைக்கப்பட்ட நாற்றுகளில் சில களவு போயின.