நாவில் கரையும் மைக்கேல்ஸ் ஐஸ்க்ரீம்.. க்ரிஸ்பி மயில் மார்க் பூந்தி.. திருச்சி ஸ்பெஷல்! #MyVikatan | Trichy michaels ice cream has unique taste

வெளியிடப்பட்ட நேரம்: 10:02 (16/05/2019)

கடைசி தொடர்பு:10:02 (16/05/2019)

நாவில் கரையும் மைக்கேல்ஸ் ஐஸ்க்ரீம்.. க்ரிஸ்பி மயில் மார்க் பூந்தி.. திருச்சி ஸ்பெஷல்! #MyVikatan

திருச்சியில் இரண்டு உணவுகள் மிகவும் ஃபேமஸ். அவற்றைப் பற்றி இங்கே பகிர்ந்துள்ளேன். 

மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம்

சிவகார்த்திகேயன், விமல் எனச் சினிமா பிரபலங்கள் ஜாலியாக உட்கார்ந்து அரட்டையடித்த இடங்களில் மைக்கேல்ஸ் ஐஸ்க்ரீமும் ஒன்று.

மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம்

அதன் சுவைக்காக, திருச்சி தலைமைத் தபால் நிலையம், மெயின்காட் கேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிளைகளில் பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் குவிகிறார்கள். குட்டிக் கிண்ணத்தில் கொடுக்கப்படும் பீட்ரூட் சாலட் ஐஸ்க்ரீம், வெண்ணிலா ஐஸ்க்ரீமை அத்தனைபேரும் ருசித்து மகிழ்கிறார்கள்.  

மயில் மார்க் பூந்தி

திருச்சிக்குள் வந்து செல்லும் பலரும் கையோடு வாங்கிச் செல்ல விருப்பப்படுவது திருச்சி மயில் மார்க் பூந்தி. திருச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகேயும், திருச்சி என்.எஸ்.பி சாலையிலும் உள்ள மயில் மார்க் மிட்டாய்க் கடையில் விற்கும் பூந்திகளுக்கு விசேஷ நாள்களில் நீண்ட வரிசை நிற்கிறது.. முந்திரி அல்வா, முந்திரி பக்கோடா, இனிப்பு பூந்தி என இங்கு காணப்படும் ஸ்வீட் ரகங்களுக்குத் தலைமுறை தலைமுறையாகப் பிரியர்கள் இருக்கிறார்கள்.

இதேபோல் துரைசாமிபுரம் பகுதிகளில் தயாரிக்கப்பட்டு, திருச்சி முழுக்க சப்ளை செய்யப்படும் கடலை மிட்டாய்களுக்காக ஏங்கும் பிரியர்கள் ஏராளம். மேலும், திண்டுக்கல் சாலை மார்க்கமாகச் செல்லும் பலரும் மணப்பாறை நெருங்கியதும் மறக்காமல் வாங்கிச் செல்லும் முருக்கு வகை கடல் கடந்து திருச்சியில் பெருமையைச் சொல்லும்.