இந்தியா முழுவதும் சப்ளை! - பேனா நிப் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் சாத்தூர் #MyVikatan | Cottage Nib Industries booming In Sattur

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (16/05/2019)

கடைசி தொடர்பு:11:30 (16/05/2019)

இந்தியா முழுவதும் சப்ளை! - பேனா நிப் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் சாத்தூர் #MyVikatan

சிவகாசி எப்படி பட்டாசுக்கு பெயர் போனதோ அதுபோல சாத்தூர் நிப்புக்குப் பெயர் போனது. `கத்தி முனையை விடப் பேனா முனை வலிமையானது' என்ற பழமொழி உண்டு.

சாத்தூர் நிப்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படும் பேனாக்களுக்கான நிப்புகள் சாத்தூரில் உற்பத்தி செய்யப்பட்டவைதான். இங்கே 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் மூலம் 2000-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரை நூற்றாண்டாக பேனா நிப் தொழில் கொடிகட்டிப் பறந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. மிகவும் நுட்பமான வேலை. கவனம் சிதறாமல் செய்ய வேண்டும். பொறுமை மிக முக்கியம். நம் கையில் கிடைக்கும் சாதாரண நிப்பை உருவாக்க 15 நிலைகளை கடக்க வேண்டும்.

சாத்தூர் நிப்

தற்போது பால்பாயின்ட் பேனாக்களின் வரவேற்பால் பேனாவின் பயன்பாடு பெருமளவு குறைந்துவிட்டது. ஆனால், பழைமையெல்லாம் எப்படி மீட்கப்பட்டு புத்துயிர் கொடுக்கப்பட்டு வருகிறதோ அதேபோல பேனாவுக்கும் நல்ல மரியாதை கிடைக்கும். பேனா நிப் தொழில் மீண்டும் புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையோடு இன்னும் ஒரு சிலர் பேனா நிப்புகளை உற்பத்தி செய்துகொண்டேதான் இருக்கின்றனர்.