வயல்வெளியில் உணவகம்.. பாட்டுப் பாடிக்கொண்டே பரிமாறும் வேலூர் இளைஞர்! #MyVikatan | Pasumai Hotel started by vellore youngster

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (16/05/2019)

கடைசி தொடர்பு:12:45 (16/05/2019)

வயல்வெளியில் உணவகம்.. பாட்டுப் பாடிக்கொண்டே பரிமாறும் வேலூர் இளைஞர்! #MyVikatan

பசுமை உணவகம்

வேலூரை அடுத்த அம்முண்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் நித்திஷ்குமார், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு வெளிநாடுகளில் 6 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். சொந்த ஊர் திரும்பிய அவர் விவசாய நிலங்களை வாங்கினார். மீண்டும் வெளிநாடு செல்வதற்கு மனமில்லாமல் வயல்வெளியில் நவீன முறையில் `பசுமை உணவகம்’ அமைத்து அசத்தியிருக்கிறார்.

பசுமை உணவகம்

ஸ்பீக்கர் வைத்து மைக்கில் பாடல்களைப் பாடிக்கொண்டே வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறார். மண் குவளையில் தேநீர், மண்பாண்டங்களில்தான் உணவு வழங்கப்படுகிறது.

பசுமை உணவகம்

இந்த உணவகத்தில் வெளிநாடுகளின் உணவுகளும் கிடைக்கிறது. இளைஞர் நித்திஷ்குமாரின் அசாத்திய முயற்சியைக் கண்டு பொதுமக்கள் வியந்துபோயிருக்கிறார்கள்.