``1.5 லட்சம் மலர்களாலான நாடாளுமன்றம்!” - ஊட்டியில் தொடங்கியது 123-வது மலர்க் கண்காட்சி | 123th Ooty Flower show

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (17/05/2019)

கடைசி தொடர்பு:12:16 (17/05/2019)

``1.5 லட்சம் மலர்களாலான நாடாளுமன்றம்!” - ஊட்டியில் தொடங்கியது 123-வது மலர்க் கண்காட்சி

1.5 லட்சம் மலர்களில் நாடாளுமன்றம், 5,000 தொட்டிகளில் பிரமாண்ட மலர்க் கூடை அலங்காரம் 35,000 பூந்தொட்டிகள் என வண்ணமயமாக ஊட்டியில் தொடங்கியது 123-வது மலர்க் கண்காட்சி
 
ஊட்டி
 
கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஊட்டி மலர்க் கண்காட்சி இன்று தொடங்கி தொடந்து 5 நாள்கள் நடைபெறுகிறது. மலர்க் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதிலும் பல லட்சம் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. 
 
மலர்
 
1 லட்சத்து 50,000 கார்னேசன் மலர்களைக் கொண்டு 84 அடி நீளம் 21 அடி உயரம், 25 அடி அகலம் கொண்ட பாராளுமன்றக் கட்டடத்தின் முகப்புத் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 10,000 கார்னேசன் மலர்கள் மற்றும் 5,000 தொட்டிகளைக் கொண்டு மலர்க் கூடை அமைக்கப்பட்டுள்ளது.
 
கண்காட்சி
 
மூன்று இடங்களில் மலர்களைக் கொண்டு செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறை 2,000 தூலிப்ஸ் மலர்களைக் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பல ஆயிரம் கொய் மலர்களைக் கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மலர் இதழ்களைக் கொண்டு வண்ணமயமான ரங்கோலி அமைக்கப்பட்டுள்ளது.
 
 
123-வது மலர் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இதில், தோட்டக்கலைத்துறைச் செயலர், ஆணையாளர், இயக்குநர் உட்பட பலர் கலந்துகொண்டனர். மலர்க் கண்காட்சியைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.