`கல்வெட்டு கவனத்திற்கு வரவில்லை’ - எடப்பாடி பழனிசாமி | TN CM Edappadi palanisamy comments on Kamal issue

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (17/05/2019)

கடைசி தொடர்பு:19:15 (17/05/2019)

`கல்வெட்டு கவனத்திற்கு வரவில்லை’ - எடப்பாடி பழனிசாமி

நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கமல்ஹாசனின் பேச்சு பற்றி கருத்து கூற முடியாத நிலையில் உள்ளேன் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிச்சாமி

கட்சி நிர்வாகிகளின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று மதுரை வந்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``கமல் பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளதே.."  என்ற கேள்விக்கு, ``மதுரை உயர் நீதிமன்றக் கிளை இது சம்பந்தமான வழக்கில் அரசியல் கட்சித் தலைவர்கள் இதுபற்றி ஊடகங்களில் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனால் அதைப்பற்றி கருத்து கூற முடியாத நிலையில் உள்ளேன்" என்றார்.

அதைத்தொடர்ந்து ``தேனியில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. என்று தேர்தல் முடிவு வருவதற்கு முன் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதே..." என்று கேட்டதற்கு, ``அதைப்பற்றி என் கவனத்திற்கு இதுவரை வரவில்லை" என்றார். தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தேர்தலுக்கு முன்பே திட்டங்கள் தீட்டப்பட்டு அதை இப்போது அதிகாரிகள் செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றாமல் பிரசாரம் செய்யும் கட்சித்தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறிவிட்டு கிளம்பினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க