இயற்கையில் கலந்த முகமது இத்ரீஸ்! | Muhammad Idrees Passed away

வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (17/05/2019)

கடைசி தொடர்பு:20:06 (17/05/2019)

இயற்கையில் கலந்த முகமது இத்ரீஸ்!

மலேசியா நாட்டில் உள்ள ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின்’ (Consumers Association of Penang) தலைவர் எம்.எஸ். முகமது இத்ரீஸ் (93) இன்று இயற்கையுடன் கலந்தார். மலேசியா நுகர்வோர் உரிமை, சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம்... குறித்த விழிப்புணர்வு பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வந்தார்.

மலேசியா இத்ரீஸ்

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை, மக்கள் இயக்கமாக மாற்றிக்காட்டிய பெருமைக்குரியவர். எளிமை, நேர்மை, தலைமைப் பண்பு, களப்போராட்டம்... போன்றவற்றில் முன்னுதாரணமாகச் செயல்பட்டவர். மலேசியாவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் அதீத ஆர்வம் காட்டினார். இவரது அமைப்பு தொடர்ந்து கொடுத்த அழுத்தம் கரணமாகத்தான், 1975-ம் ஆண்டு, மலேசிய அரசாங்கம் ‘சுற்றுச்சூழல் துறையை’ உருவாக்கியது. 

இத்ரீஸ்

அந்நாட்டில் உள்ள மக்கள் விஷமில்லாத உணவு உண்ண வேண்டும் என்பதற்காக விவசாயம் சார்ந்த பல நிகழ்ச்சிகளை நடத்தினார். அந்நாட்டு விவசாயிகளைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி இயற்கை விவசாயம் கற்று வரச்செய்து, பினாங்கு மாநிலத்தில் இயற்கை விவசாயத்தைப் பரப்பிய முன்னோடி இவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரை, மலேசியாவுக்கு வரவழைத்து, தமிழ், சீன, மலேசிய விவசாயிகளுக்கு இயற்கை விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொடுக்க வைத்தார். மலேசியா நாட்டு மக்களால், பெரிதும் மதிக்கப்பட்ட முகமது இத்ரீஸ் பூர்வீகம், தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க