மூலிகை பொம்மை.. அமுது படையல்! குழந்தை வரம் கொடுக்கும் விநோத விழா #MyVikatan | Peculiar worship method followed in thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (18/05/2019)

கடைசி தொடர்பு:08:20 (18/05/2019)

மூலிகை பொம்மை.. அமுது படையல்! குழந்தை வரம் கொடுக்கும் விநோத விழா #MyVikatan

கும்பகோணம் அருகே உள்ளது வேப்பத்தூர். இந்த ஊரில் உள்ள ஆத்திஸ்வர ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாள் அமுது படையல் விழா விமரிசையாக நடைபெறுகிறது.

வேப்பத்தூர்

நூதன முறையில் நடைபெறும் இந்த விழாவுக்குக் குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் குவிகின்றனர். அங்குள்ள வீடு ஒன்றில் மூலிகைகளால் செய்யப்பட்ட சீராளன் பொம்மை வைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள் பெண் வேடமிட்டும், துறவி ஒருவர் பிச்சாண்டி வேடத்திலும் வந்து குழந்தை வரம் வேண்டி நிற்கும் பெண்களின் புடவை முந்தானையில் பொம்மையை வைக்கின்றனர். உடனே பெண்கள் `எனக்குக் குழந்தை வரம் கொடுங்கள்' என வேண்டிக்கொள்கின்றனர். 

வேப்பத்தூர்

பின்னர் அந்தப் பொம்மை ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு சில பூஜைகள் செய்யப்படுகிறது. பின்னர் பொம்மையைக் காய்கறியில் போட்டு சமைக்கின்றனர். இதைத் தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் வரிசையாக அமர்ந்திருக்கின்றனர். அவர்களிடம் சாதம், பொம்மை போட்டு சமைக்கப்பட்ட காய்கறி ஆகியவை கொடுக்கப்படுகிறது.

வேப்பத்தூர்

வரிசையாக வரும் பெண்கள் சிவனடியார்களிடம் சில்லறைக் காசுகளைக் கொடுத்து முந்தானையில் இலையை ஏந்தி உணவு வாங்குகின்றனர். இதேபோல் அனைத்து சிவனடியார்களிடமும் உணவைப் பெற்று அதை வீணாக்காமல் அந்தப் பெண்ணும், கணவரும் சாப்பிடுகின்றனர். இந்த நூதன வழிபாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு அடுத்த வருடமே குழந்தை பிறக்கும் என்பது ஐதிகம். ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்துகொள்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க